Sydneyசிட்னியில் பரவி வரும் தட்டம்மை நோய் - மக்களுக்கு எச்சரிக்கை

சிட்னியில் பரவி வரும் தட்டம்மை நோய் – மக்களுக்கு எச்சரிக்கை

-

சிட்னியில் கடந்த வாரம் பணியிடம், மருத்துவ மையம் மற்றும் மதுபானக் கடைகளில் தட்டம்மை பரவியதைத் தொடர்ந்து, தட்டம்மை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து வந்த நோய்த்தொற்று நபர் சிட்னியின் உள் மேற்குப் பகுதியில் பல இடங்களுக்குச் சென்றதை அடுத்து, நியூ சவுத் வேல்ஸ் மாநில சுகாதாரத் துறையால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நவம்பர் 7 ஆம் திகதி காலை 6.15 மணி முதல் 7.00 மணி வரை மெட்ரோ பெட்ரோலியம் என்மோர் சாலைக்கு வருபவர்கள் அம்மை நோய் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சுகாதாரத் துறை மேலும் எச்சரித்துள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் நவம்பர் 7 ஆம் திகதி மாலை 6.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை Marrickville இல் உள்ள Philter Brewing Public Bar மற்றும் நவம்பர் 10 ஆம் திகதி Marrickville இல் உள்ள மருத்துவ மையத்திற்கு சென்றது அடையாளம் காணப்பட்டுள்ளது.

மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு பிறகு காய்ச்சல், கண் வலி, இருமல் மற்றும் சிவப்பு புள்ளிகள் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் கவனமாக இருக்குமாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒரு நபருக்கு அறிகுறிகள் தோன்றுவதற்கு வழக்கமாக 18 நாட்கள் ஆகும் என்பதால், தட்டம்மை அறிகுறிகளைக் கொண்ட எந்தவொரு நோயாளியும் கூடிய விரைவில் GP அல்லது மருத்துவமனைக்குச் செல்லுமாறு சுகாதாரத் துறை கேட்டுக்கொள்கிறது.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...