Breaking NewsA R ரஹ்மான் - சாய்ரா பானு விவாகரத்து - அதிர்ச்சியில்...

A R ரஹ்மான் – சாய்ரா பானு விவாகரத்து – அதிர்ச்சியில் ரசிகர்கள்

-

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளரான ஏ ஆர் ரஹ்மானை அவரது மனைவி சாய்ரா பானு விவாகரத்து செய்வதாக சற்றுமுன் அறிவித்துள்ளார். அவரது இந்த சமூக வலைதளப் பதிவு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாய்ரா தரப்பிலிருந்து வழக்குரைஞர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சாய்ரா தெரிவித்திருப்பதாவது, “எங்களுடைய உறவில் ஏற்பட்டுள்ள உணர்ச்சிப்பூர்வ அழுத்தத்தின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருவருக்குமிடையேயான காதலைக் கடந்தும், இருவருக்குமிடையே பிரிவும் விரிசலும் ஏற்பட்டுள்ளதாக” அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“மிகுந்த வேதனையுடன் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், சவாலான இந்த தருணத்தில், பொதுமக்கள் எங்களுடைய தனிப்பட்ட வாழ்கையை புரிந்துகொண்டு மதிப்பளிக்கவும்” என சாய்ரா பானு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்மூலம், ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு தம்பதியின் கடந்த 29 ஆண்டுகால திருமண உறவு முறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானுவுக்கும் கடந்த 1995-ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிக்கு கதீஜா, ரஹீமா ஆகிய இரு மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.

Latest news

செயலிழக்கும் அபாயத்தில் உள்ள மெட்டாவின் WhatsApp மற்றும் Instagram

Meta Platforms Inc ஒரு தசாப்தத்திற்கு முன்பு வாங்கிய இரண்டு முக்கிய தளங்களான WhatsApp மற்றும் Instagram-ஐ விற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒரு முக்கிய...

ஆஸ்திரேலியாவில் Taco Bell-இற்கு நடக்கப் போவது என்ன?

பிரபல மெக்சிகன் உணவுச் சங்கிலியான Taco Bell அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் இருந்து மறைந்துவிடும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. Guzman y Gomez...

ஆஸ்திரேலிய குழந்தைகளின் கணித அறிவு குறித்து வெளியான புதிய அறிக்கை

ஆஸ்திரேலிய குழந்தைகளின் கணித அறிவை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது ஆஸ்திரேலியக் குழந்தைகளுக்கு கணித அறிவு குறைவாக இருப்பதை இது காட்டுகிறது. பாடத்தைக் கற்பிப்பதில்...

ஆஸ்திரேலியாவின் நீண்ட விடுமுறைக்கு முன்னதாக உயரும் பெட்ரோல் விலை

ஆஸ்திரேலியாவில் வரவிருக்கும் நீண்ட விடுமுறைக்கு முன்னதாக பெட்ரோல் விலையில் மாற்றம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கூர்மையான வீழ்ச்சியால் ஆஸ்திரேலியா முழுவதும்...

ஆஸ்திரேலிய குழந்தைகளின் கணித அறிவு குறித்து வெளியான புதிய அறிக்கை

ஆஸ்திரேலிய குழந்தைகளின் கணித அறிவை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது ஆஸ்திரேலியக் குழந்தைகளுக்கு கணித அறிவு குறைவாக இருப்பதை இது காட்டுகிறது. பாடத்தைக் கற்பிப்பதில்...

அதிக கட்டணம் வசூலிப்பதாக டாக்ஸி ஓட்டுநர்கள் மீது குற்றச்சாட்டு

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்திற்கு வெளியே உள்ள டாக்ஸி ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு ஸ்காட்டிஷ் தம்பதியினர் பிரிஸ்பேர்ண் விமான நிலையத்திலிருந்து சிட்னி...