காஸாவில் நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்த சுமார் 100 லொரிகளிலுள்ள நிவாரணப் பொருட்களை ஆயுதம் ஏந்திய கும்பல் கடத்தி சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்தப் பகுதியில் கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்றுவரும் போரால் அங்கு கடுமையான உணவுப் பஞ்சம் நிலவிவருகிறது. ஹமாஸை ஒடுக்குவதற்காக காஸாவை இஸ்ரேல் இராணுவம் முற்றுகையிட்டுள்ளதால் சர்வதேச நாடுகள் அந்தப் பகுதிக்கு போதுமான அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப முடியாத நிலை உள்ளது.
இந்தச் சூழலில், மத்திய காஸா பகுதிக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற சுமார் 100 லொரிகளை ஆயுதம் ஏந்திய கும்பல் சுற்றிவளைத்து, அதிலிருந்த பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக ஐ.நா. தெரிவித்தது.
போர் காரணமாக பெரும்பாலான மக்கள் புலம் பெயர்ந்துள்ள மத்திய காஸாவில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் உணவுப் பற்றாக்குறை நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது.
நன்றி தமிழன்