நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக நாளை (21) முதல் 4 நாட்களுக்கு புகையிரத சேவை இயங்காது என தெரிவிக்கப்படுகிறது.
சிட்னியில் இயங்கும் அனைத்து ரயில் சேவைகளும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கு இடையில் ரத்து செய்யப்படலாம், இது வேலை, பள்ளி மற்றும் பல்கலைக்கழகத்திற்கு பயணம் செய்யும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
தொழிற்சங்கங்களுடன் இணக்கப்பாடு எட்டப்படாததன் காரணமாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைகள் தொடர்பில் அரச போக்குவரத்து அமைச்சர் ஜோ ஹெய்லன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
கோடிக்கணக்கான மக்கள் சிட்னி ரயில் சேவையை நம்பி இருப்பதாகவும், இந்த தொழில்துறை நடவடிக்கையால் அவர்களின் அன்றாட பணிகள் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் ஜோ ஹெய்லன் தெரிவித்துள்ளார்.
இதேபோன்ற போக்குவரத்து சேவையை சிட்னி ரயில்வே வழங்க முடியாது என ஜோ ஹெய்லன் மேலும் தெரிவித்துள்ளார்.
புகையிரத பயணங்களை உத்தியோகபூர்வமாக இரத்துச் செய்வது அல்லது இரத்துச் செய்யப்பட்டால் மாற்றுப் போக்குவரத்தை மேற்கொள்வது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மூன்று ஆண்டுகளுக்குள் 3% சம்பள உயர்வு வழங்க மாநில அரசு முடிவு செய்திருந்தாலும், 4 ஆண்டுகளுக்குள் 32% சம்பள உயர்வை சங்கம் கோருகிறது.