16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்ய ஆஸ்திரேலிய மத்திய அரசு புதிய சட்டங்களை முன்மொழிந்துள்ளது.
எவ்வாறாயினும், எந்த சமூக ஊடக வலையமைப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளன என்பது குறித்து குறிப்பிட்ட விளக்கம் எதுவும் வழங்கப்படவில்லை. மேலும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சமூக ஊடக வலையமைப்பை அணுக அனுமதித்தால் 50 மில்லியன் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த புதிய விதிகள் TikTok, Facebook, Snapchat, Redit மற்றும் Instagram மற்றும் X போன்ற சமூக ஊடகங்களுக்கு பொருந்தும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் மிச்செல் ரோலண்ட் கூறியுள்ளார்.
மத்திய அரசு தற்போது இந்த சமூக ஊடக நெட்வொர்க்குகளை மட்டுமே நியமித்துள்ளது. ஆனால் எதிர்காலத்தில், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பிற சமூக ஊடக வலையமைப்புகளை அணுகுவது தடைசெய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த தடை Facebook Messenger, Kids, Whatsapp, ReachOut, PeerChat, Kids Helpline MyCircle, Google Classroom மற்றும் YouTube போன்ற சமூக ஊடக நெட்வொர்க்குகளுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வயது வரம்பு தொடர்பான புதிய சட்டங்கள் இன்னும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாத நிலையில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சில தகவல்கள் மாறலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.