Newsமற்றுமொரு பிரபல நாட்டில் அதிகரித்துவரும் அகதிகளின் எண்ணிக்கை

மற்றுமொரு பிரபல நாட்டில் அதிகரித்துவரும் அகதிகளின் எண்ணிக்கை

-

கனடாவில், அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

அவர்களுக்காக தற்காலிக தங்குமிடங்களை உருவாக்க அரசு திட்டமிட்டுவருகிறது.

Ottawa நகரம், அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக தற்காலிக தங்குமிடங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளthu.

அவை தற்காலிட தங்குமிடமாகவும், மொழிப் பயிற்சி மற்றும் பணி உதவி ஆலோசனை மையமாகவும் செயல்பட இருக்கின்றன.

இந்த தங்குமிடங்கள், அகதிகள் சில வாரங்கள் தங்குவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. பின் அவர்கள் பொருத்தமான இடங்களில் தங்கவைக்கப்படுவார்கள்.

விடயம் என்னவென்றால், இப்படி அகதிகளுக்காக அரசு தற்காலிக தங்குமிடங்கள் உருவாக்க திட்டமிட்டுள்ள விடயம், சம்பந்தப்பட்ட பகுதியில் அக்கம்பக்கத்தில் வாழும் கனேடியர்களுக்கு கோபத்தை உருவாக்கியுள்ளது.

சொல்லப்போனால், உள்ளூர் மக்களுடைய எதிர்ப்பு காரணமாக, Ottawa நகரத்தில் அகதிகளுக்காக கட்ட திட்டமிடப்பட்டிருந்த முதல் தற்காலிக தங்குமிடம் ரத்து செய்யப்பட்டேவிட்டது.

ஆகவே, அதற்கு பதிலாக தற்போது வேறு இரண்டு இடங்களில் தற்காலிக தங்குமிடங்கள் உருவாக்க அரசு திட்டமிட்டுவருகிறது.

Latest news

விக்டோரியாவில் அதிகரித்து வரும் கத்திக்குத்து சம்பவங்கள்

விக்டோரியாவில் 2025 டிசம்பர் பிற்பகுதியிலிருந்து தொடர்ச்சியான கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆறு நாட்களுக்கு முன்பு ஃபிட்ஸ்ராய் மற்றும் கிளைடில் நடந்த கத்திக்குத்து சம்பவங்களில் இரண்டு பேர் இறந்ததைத்...

குயின்ஸ்லாந்தில் 200மிமீக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

நூற்றுக்கணக்கான மில்லிமீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், குயின்ஸ்லாந்து மக்கள் திடீர் வெள்ளத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். Carpentaria வளைகுடாவிலிருந்து கிழக்கு கடற்கரை வரை மாநிலத்தின் முழு...

ஆயிரக்கணக்கான சட்டவிரோத மின்சார வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

குயின்ஸ்லாந்து முழுவதும் சட்டவிரோத மின்-ஸ்கூட்டர் மற்றும் மின்-பைக் பயன்பாட்டை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட நடவடிக்கையில் 2000க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் முதல் டிசம்பர் 23 வரை,...

ஆயிரக்கணக்கான மருத்துவமனை இறப்புகளுக்கு மனிதத் தவறுதான் காரணம்

ஆஸ்திரேலிய மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான இறப்புகளைத் தடுத்திருக்கலாம் என்றும், மனிதத் தவறுதான் முக்கியக் காரணம் என்றும் ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. Royal Australian College of Surgeons...

மருத்துவ மையத்தின் மீது பேருந்து மோதி விபத்து

சிட்னி வடக்கின் Rydeல் உள்ள ஒரு மருத்துவ மையத்தின் மீது பேருந்து மோதியதில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை 9...

சிட்னியில் கொடிய வைரஸால் நான்கு இறப்புகள் பதிவு

கொடிய வைரஸுடன் தொடர்புடைய நான்காவது நபர் இறந்துவிட்டதாக நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரம் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, சிட்னி CBD-யில் பதிவான இந்த இறப்புகளுடன் தொடர்புடைய வைரஸ் Legionnaires'...