Newsநெதன்யாகுவை கைது செய்ய சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

நெதன்யாகுவை கைது செய்ய சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

-

காஸாவில் போா்க் குற்றத்தில் ஈடுபட்டதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, அந்த நாட்டு முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சா் யோவாவ் கலான்ட் ஆகியோருக்கு எதிராக சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தவிர, கடந்த ஆண்டு ஒக்டோபா் 7ஆம் திகதி இஸ்ரேலில் நடத்திய தாக்குதல் தொடா்பாக ஹமாஸ் தலைவா்களுக்கு எதிராகவும் அந்த நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது.

காஸாவில் நெதன்யாகுவும் யோவாவ் காலன்டும் வேண்டுமென்றே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற போா்க் குற்றத்தில் ஈடுபடுவதால் அவா்களை சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த நீதிமன்றத்தின் குற்றஞ்சாட்டு வழக்குரைஞா் கரீம் கான் கடந்த மே மாதம் கோரிக்கை விடுத்திருந்தாா்.

அப்போது அவா் வெளியிட்ட அறிக்கையில், காஸா மக்கள் உயிா்வாழ்வதற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அவா்களுக்குக் கிடைக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக நெதன்யாகுவும் கலான்டும் வேண்டுமென்றே திட்டமிட்டு சதி செய்வதாகக் குற்றஞ்சாட்டியிருந்தாா்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு நேற்று வியாழக்கிழமை குற்றச்சாட்டுகள் தொடரபான கோரிக்கைகளை   ஏற்றுக் கொண்டுள்ள சா்வதேச குற்றவியல் நீதிமன்றம், கைது உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள AI தொழில்நுட்பச் செலவுகள்

2023-24 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) வணிகச் செலவு $24.4 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதில் 2021-2022 முதல் 142% வளர்ச்சியடைந்துள்ள AI தொழில்நுட்பத்திற்கான...

த.வெ.கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் மூன்று பேர் உயிரிழப்பு

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21ஆம் திகதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வரும்போதும் பின்னரும் தமிழக வெற்றி கழகத்தின்...

குழந்தை பராமரிப்பு பணியாளர்களுக்கான புதிய சட்டம்

குழந்தை பராமரிப்பு மையங்களில் உள்ள அனைத்து ஊழியர்களும் மொபைல் போன்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் என்று மத்திய கல்வி...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...

செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் மனச் சிதைவுகள்

Microsoft AI தலைவர் Mustafa Suleyman கூறுகையில், AI சைக்கோசிஸ் எனப்படும் ஒரு புதிய நிலை மக்களிடையே அதிகரித்து வருவதாகவும், இதனால் அவர்கள் மனநலக் கோளாறுகளுக்கு...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...