News30,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்திலிருந்து இறங்க முற்பட்ட பயணி

30,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்திலிருந்து இறங்க முற்பட்ட பயணி

-

Milwaukee-இல் இருந்து Dallas Fort Worth-இற்கு பறந்து கொண்டிருந்த American Airlines விமானத்தில் பயணி ஒருவர் திடீரென விமானத்தில் இருந்து இறங்க விரும்புவதாக கூறியுள்ளார்.

அந்த சமயத்தில் விமானம் ஏற்கனவே 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பயணி விமானத்தின் கதவை திறக்க முயற்சித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுக்க முயன்ற விமானப் பணிப்பெண்ணையும் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அப்போது, ​​பல பயணிகள் சேர்ந்து அந்த நபரை தடுத்து, தடித்த டேப்பைப் பயன்படுத்தி அவரது கை, கால்களை ஒன்றாகக் கட்டியுள்ளனர்.

அதன் பிறகு, திட்டமிட்டபடி விமானம் தரையிறங்கியதாக கூறப்படுகிறது.

பின்னர், விமான நிலையத்தின் பொதுப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிநிதிகள் விமானத்தில் வந்து இடையூறு ஏற்படுத்திய பயணியைத் தடுத்து நிறுத்தி, மனநலப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது.

Latest news

பாலி தீவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

இந்தோனேசிய பாலி தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிக்க விரும்பும் ஆஸ்திரேலியர்களை குறிவைத்து பெரிய அளவிலான விசா மோசடி நடப்பதாக வங்கிகளும் பாதுகாப்புப் படையினரும் எச்சரித்துள்ளனர். போலி வலைத்தளங்கள்...

2026-இல் ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும்!

2026 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியாக வீட்டுவசதி நெருக்கடி தொடரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வீட்டுத் தேவை விநியோகத்தை விட அதிகமாக இருப்பதால், விலைகளும்...

32 நாடுகளுக்கான ஆஸ்திரேலியர்களுக்கான பயண எச்சரிக்கைகள்

பயணப் போக்குகள் குறித்த சமீபத்திய பகுப்பாய்வு, 2026 ஆம் ஆண்டுக்குள் 10 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வார்கள் என்று வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும், மத்திய அரசு...

சீனாவில் 2 விநாடிகளில் 700 கி.மீ. பயணித்த ரயில்

சீனா​வின் தேசிய பாது​காப்பு தொழில்​நுட்ப பல்​கலைக்​கழகத்​தின் ஆராய்ச்​சி​யாளர்​கள் ‘Magnetic levitation' எனப்​படும் காந்​தப்​புல தொழில்​நுட்​பத்​தின் அடிப்​படை​யில் 1 தொன் எடை கொண்ட ரயிலை இயக்கி சோதனை...

தயவு செய்து மீண்டும் நடியுங்கள் விஜய் – நாசர் வேண்டுகோள்

தயவு செய்து மீண்டும் நடியுங்கள் விஜய் என்று ரசிகர்கள் சார்பாக நாசர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மலேசியாவில் ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய்...

சீனாவில் 2 விநாடிகளில் 700 கி.மீ. பயணித்த ரயில்

சீனா​வின் தேசிய பாது​காப்பு தொழில்​நுட்ப பல்​கலைக்​கழகத்​தின் ஆராய்ச்​சி​யாளர்​கள் ‘Magnetic levitation' எனப்​படும் காந்​தப்​புல தொழில்​நுட்​பத்​தின் அடிப்​படை​யில் 1 தொன் எடை கொண்ட ரயிலை இயக்கி சோதனை...