மெல்பேர்ணில் இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 7 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மெல்பேர்ணின் தென்மேற்கு பகுதியில் இன்று அதிகாலை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன், 23 வயதுடைய இளைஞரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மற்றொரு 16 வயது குழந்தையும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவை இரண்டு தடவைகளில் இடம்பெற்ற இரு கத்திக் குத்துச் சம்பவங்கள் எனவும் விக்டோரியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.