Newsசீனாவின் 15 நாள் இலவச விசா கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா

சீனாவின் 15 நாள் இலவச விசா கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா

-

சீனாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒருதலைப்பட்சமான 15 நாள் இலவச விசாக் கொள்கையில் உள்ள நாடுகளில் ஆஸ்திரேலியாவும் சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த முறைமையில் பல புதிய நாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நவம்பர் 8, 2024 முதல் டிசம்பர் 31, 2024 வரை, இந்த அமைப்பின் மூலம், ஆஸ்திரேலியர்கள் தங்கள் பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் சீனாவுக்குச் செல்லலாம் மற்றும் 15 நாட்களுக்கு சீனாவில் தங்குவதற்கான வாய்ப்பைப் பெறலாம்.

கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத் துறையை மீளக் கட்டியெழுப்புவதும், நாடுகளுக்கிடையிலான பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதும் இதன் நோக்கமாகும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்டோரா, பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், மொனாக்கோ, நார்வே, ஸ்லோவாக்கியா மற்றும் தென் கொரியா ஆகியவை இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்ட புதிய நாடுகளாகும்.

இந்த வேலைத்திட்டத்தின் மூலம் சீனா மீதான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் ஈர்ப்பை மீளப் பெறுவதுடன், இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளும் மீண்டும் வலுவடையும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை மீண்டும் இழந்தார் எலோன் மஸ்க்

உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை எலான் மஸ்க் மீண்டும் இழந்துள்ளார். தற்போது இந்தப் பட்டம் Oracle-இன் இணை நிறுவனர் Larry Ellison-இற்குச் சொந்தமானது. Oracle வெளியிட்ட...

குழந்தைகளுக்கு சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை வழங்குவதை நிறுத்துங்கள் – UNICEF

பள்ளி வயது குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே உடல் பருமன் அதிகரித்துள்ளது என்று UNICEF புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஆஸ்திரேலிய 5 முதல் 19 வயது...

ஜனவரி முதல் Centrelink-இல் அமலுக்கு வரும் புதிய நடவடிக்கை

ஜனவரி 5, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில் Centrelink ஒரு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, தகுதியுள்ள குடும்பங்கள் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் குறைந்தபட்சம் 3...

நிறம் மாறிய அந்தோணி அல்பானீஸ்

பசிபிக் தலைவர்களுடனான ஒரு முக்கியமான சந்திப்பிற்கு இளஞ்சிவப்பு நிற சட்டை அணிந்து வந்த பிறகு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெட்கப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மாநாட்டில் பங்கேற்ற...

நிறம் மாறிய அந்தோணி அல்பானீஸ்

பசிபிக் தலைவர்களுடனான ஒரு முக்கியமான சந்திப்பிற்கு இளஞ்சிவப்பு நிற சட்டை அணிந்து வந்த பிறகு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெட்கப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மாநாட்டில் பங்கேற்ற...

அடிலெய்டில் பூச்சி பரவலால் பாதிக்கப்பட்டுள்ள காடுகள்

ஜெயண்ட் பைன் செதில் என்பது பைன் மரங்களைக் கொல்லும் ஒரு அயல்நாட்டு பூச்சியாகும், மேலும் இது மனிதர்களால் பரவக்கூடியது. இதுவரை, அடிலெய்டின் வடகிழக்கு புறநகர்ப் பகுதிகளில் கிட்டத்தட்ட...