அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய மூன்று எத்தியோப்பியர்களால் ஒரு விமானம் கடத்தப்பட்டு நவம்பர் 23ம் திகதியுடன் 28 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.
நவம்பர் 23, 1996 இல், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் போயிங் 767-200ER விமானம் கடத்தப்பட்டு, கடத்தல்காரர்கள் விமானிகளை ஆஸ்திரேலியாவிற்கு பறக்க உத்தரவிட்டனர்.
பறந்து கொண்டிருந்த போது விமானம் எரிபொருள் தீர்ந்து கொமரோஸ் தீவுகளுக்கு அப்பால் கடலில் விழுந்து நொறுங்கியது.
விமானத்தில் இருந்த 175 பயணிகள் மற்றும் பணியாளர்களில், மூன்று கடத்தல்காரர்கள் உட்பட 125 பேர் இந்த விபத்தில் இறந்தனர். மேலும் இந்த விபத்தில் 50 பயணிகள் உயிர் தப்பினர்.
அந்த கொடூர சம்பவம் நடந்து நேற்றுடன் (நவம்பர் 23) 28 ஆண்டுகள் நிறைவடைகிறது.
28 வருடங்களின் பின்னர் இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் நிகழ்வும் நேற்று இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.