Newsவிக்டோரியாவில் நடந்த மாபெரும் திருவிழாவில் நடத்தப்பட்ட Pill Testing

விக்டோரியாவில் நடந்த மாபெரும் திருவிழாவில் நடத்தப்பட்ட Pill Testing

-

“Beyond The Valley” திருவிழாவிற்கு சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக முதன்முறையாக மாத்திரை பரிசோதனை முறை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு டிசம்பர் 28 முதல் ஜனவரி 1 வரை Geelong அருகே நடைபெறும் “Beyond The Valley” திருவிழாவில் 35,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திருவிழாவின் மூலம் முதன்முறையாக மாத்திரை பரிசோதனை முறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும், “Beyond The Valley” உட்பட புதிய வருடத்தில் நடைபெறவுள்ள மேலும் 10 நிகழ்வுகளுக்கு Pill Testing முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக விக்டோரியா முதல்வர் ஜெசிந்தா ஆலன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் மெல்பேர்ணில் நடைபெற்ற Hardmission திருவிழாவில் MDMA என்ற மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்ட 8 பேர் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டதையடுத்து, மாத்திரை பரிசோதனை முறையை நிறுவுமாறு நிபுணர்கள் கோரிக்கை விடுத்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த Pill Testing சேவையின் மூலம், அதிநவீன தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மருந்துகள், திரவங்கள், இரசாயனங்கள் மற்றும் மருந்து வகைகள் போன்றவற்றை இரகசியமாக அடையாளம் காண முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விக்டோரியா அரசாங்கம் 2025 ஆம் ஆண்டின் மத்தியில் மெல்பேர்ணில் மாத்திரை சோதனைக்கான நிரந்தர இடத்தைத் திறக்கும் என்றும் அறிவித்துள்ளது.

Latest news

மன்னர் சார்லஸை சந்தித்த தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர்

தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் Peter Malinauskas, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் மன்னர் சார்லஸை சந்தித்து, மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து கலந்துறையாடியுள்ளார். Malinauskas-இன் ஏழு...

Aldi-இல் இருந்து புதிய சூரிய ஆற்றல் சேவை

Aldi பல்பொருள் அங்காடி சங்கிலி விக்டோரியாவில் உள்ள மக்களுக்கு சூரிய சக்தி மற்றும் பேட்டரி தொகுப்புகளை வழங்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, 10kWh பேட்டரி, 6.6kW சோலார் சிஸ்டம்...

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் அரசியல் ஆர்வலர்

பிரபல அமெரிக்க வர்ணனையாளரும் கன்சர்வேடிவ் கட்சி ஆர்வலருமான Charlie Kirk, சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் உட்டாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த வெளிப்புற...

ANU துணைவேந்தர் ராஜினாமா செய்தார்

பல மாத சர்ச்சைகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை Genevieve Bell ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் 13வது துணைவேந்தராக Genevieve Bell...