Newsவெப்ப அலை எச்சரிக்கை - இரண்டு மாகாணங்கள் மொத்தமாக இருளில் மூழ்கும்...

வெப்ப அலை எச்சரிக்கை – இரண்டு மாகாணங்கள் மொத்தமாக இருளில் மூழ்கும் அபாயம்

-

அவுஸ்திரேலியாவில் இந்த பருவத்தின் முதல் வெப்ப அலை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ள நிலையில், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்கள் இருளில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

நிலக்கரியில் இயங்கும் பெரிய மின் நிலையங்களில் ஏற்படும் மின் தடைகளும் வெப்ப அலைகளுக்கிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு சிட்னியின் சில பகுதிகள் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் 40Cயை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி வாரம் முழுவதும் வெப்பநிலை 30C என தொடரும் என்றே கூறப்படுகிறது. அத்துடன் நியூ சவுத் வேல்ஸ் கிழக்குப் பகுதிகளில் வெப்ப அலை குறைந்த அளவு முதல் கடுமையான தீவிர நிலை வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை பிற்பகல் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மின்சார விநியோகம் எதிர்பார்த்த நிலையில் இருக்காது என்றே Aemo அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 3 மணி முதல் இரவு 10.30 வரையில் மின்சாரம் தடைபடும் நிலை இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி, திட்டமிடப்பட்ட மற்றும் திட்டமிடப்படாத பராமரிப்பு காரணமாக கிட்டத்தட்ட ஆறு ஜிகாவாட் நிலக்கரி எரியும் மின் நிலையங்கள் இயங்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.

Latest news

Smartwatch அளவீடுகள் எப்போதும் துல்லியமாக இருக்காது – Apple நிறுவனம்

Apple நிறுவனத்தின் Smart Watch Series 11 இல் காட்டப்பட்டுள்ள உயர் இரத்த அழுத்த அளவீடுகளைத் துல்லியமாகக் கண்டறிய மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு நிறுவனம் பயனர்களுக்கு...

13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த Bosch நிறுவனம்

ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான Bosch அதன் கிளையிலிருந்து சுமார் 13,000 பேரை பணிநீக்கம் செய்ய தீர்மானித்துள்ளது. உலகம் முழுவதும்...

த.வெ.க மாநாடு – கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 36 பேர் பலி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று (27) இரவு கரூர் மாவட்டத்தில் மக்களைச் சந்தித்து உரையாற்றிய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி...

செயற்கை நுண்ணறிவு கொண்ட அணு ஆயுதங்கள் குறித்து ஐ.நா. எச்சரிக்கை

அணு ஆயுதங்கள் கட்டுப்படுத்தப்படாவிட்டால், போரில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு கட்டுப்படுத்தப்படாவிட்டால், எதிர்காலத்தில் பொதுமக்கள் வரம்பற்ற இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கும் என்று வெளியுறவு அமைச்சர் பென்னி வோங்...

AFL இறுதிப் போட்டிக்குப் பிறகு தேசிய அளவில் பரவும் நோய்

AFL Grand Final-இற்குப் பிறகு தேசிய அளவில் தட்டம்மை நோய் பரவல் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குயின்ஸ்லாந்தில் தற்போது சுமார் 20 தட்டம்மை வழக்குகள் உள்ளன....

40 ஆண்டுகளுக்கு பின் மெல்பேர்ண் ரயில்வே வலையமைப்பில் ஏற்படவுள்ள மாற்றம்

மெல்பேர்ணின் ரயில் வலையமைப்பு அதன் மிகப்பெரிய புதுப்பித்தல் திட்டத்திற்கு தயாராகி வருகிறது. மெட்ரோ சுரங்கப்பாதை என்று அழைக்கப்படும் இந்த திட்டம், 40 ஆண்டுகளில் ரயில்வே வலையமைப்பில் ஏற்பட்ட...