Cinemaசிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்

-

சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தற்போது அவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியானது. தற்போது, இந்த படம் குறித்த சில ஆச்சரியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் வில்லன் கேரக்டர் வலிமையாக இருக்கும் என்பதால், ஒரு ஹீரோவையே வில்லனாக தேர்வு செய்ய வேண்டும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில், ஜெயம் ரவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாகவும், தற்போது ஜெயம் ரவி சிவகார்த்திகேயனின் 25-வது படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சிவகார்த்திகேயன் கேரக்டருக்கு சமமான முக்கியத்துவம் மற்றும் ஹீரோவிடம் அடி வாங்கும் காட்சிகள் இருக்கக்கூடாது உள்பட சில நிபந்தனைகளுடன் ஜெயம் ரவி இந்த படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், அதே போல் அதர்வாவும் இந்த படத்தில் இணைகிறார் என்றும், இந்த படத்தின் மேக்கிங் செலவு மட்டுமே மொத்தம் 150 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடித்த ’அமரன்’ திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கு பிசினஸ் செய்ததை அடுத்து, இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

உலகின் வெப்பமான இடமாக மாறும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா முழுவதும் நிலவும் வழக்கத்திற்கு மாறான வெப்பமான வானிலையால் முழு கண்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Marble Barஉலகின் மிக வெப்பமான இடமாக...

விக்டோரியாவிற்கு பேரழிவு தரும் தீ எச்சரிக்கைகள்

விக்டோரியாவின் பல மாவட்டங்களுக்கு நாளை பேரழிவு தரும் தீ எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. Longwood பகுதியில் காட்டுத்தீ கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதாகவும், பல வீடுகள் மற்றும் சொத்துக்கள்...

வட்டி விகிதக் குறைப்பு குறித்த நம்பிக்கைகள் பொய்த்துப் போயின!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு விரைவில் வட்டி நிவாரணம் கிடைக்காது என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆண்ட்ரூ ஹவுசர் இன்று தெரிவித்தார். இந்த நாட்களில் பணவீக்கம்...

அமெரிக்கா செல்லும் Bondi ஹீரோ

Bondi நாயகன் அகமது அல் அகமது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார். டிசம்பர் 14 பயங்கரவாத தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட 43 வயதான அவர், தனது...

வட்டி விகிதக் குறைப்பு குறித்த நம்பிக்கைகள் பொய்த்துப் போயின!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு விரைவில் வட்டி நிவாரணம் கிடைக்காது என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆண்ட்ரூ ஹவுசர் இன்று தெரிவித்தார். இந்த நாட்களில் பணவீக்கம்...

மெல்பேர்ணில் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல்

மெல்பேர்ணில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஈடுபட்ட ஒரு குழுவைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது. இரு குழுக்களுக்கிடையே ஆன்லைன் உரையாடல் அதிகரித்ததன் விளைவாக...