Newsவிக்டோரியாவில் சூதாட்டக்காரர்களுக்கு வெளியான அதிர்ச்சியான தகவல்

விக்டோரியாவில் சூதாட்டக்காரர்களுக்கு வெளியான அதிர்ச்சியான தகவல்

-

விக்டோரியா மாகாணத்தில் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஒரே நேரத்தில் Porker இயந்திரங்களில் போடக்கூடிய அதிகபட்ச பணம் 1000 டாலர்களில் இருந்து 100 டாலர்களாக குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விக்டோரியா மாநில அரசாங்கம் 26ம் திகதி பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்திய புதிய சட்ட சீர்திருத்தங்களே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய சட்ட சீர்திருத்தங்கள் மூலம் போக்கர் இயந்திரங்களுக்கு பிரத்யேக Player Card அறிமுகம் செய்யப்பட உள்ளது மேலும் இதன் மூலம் பந்தயம் கட்டுபவர்கள் எவ்வளவு பணம் செலவிடுகிறார்கள் என்பதை கண்காணித்து சூதாட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு மெல்பேர்ணில் உள்ள கிரவுன் கேசினோ அனைத்து சூதாட்டக்காரர்களுக்கும் 3000 போக்கர் இயந்திரங்களை உள்ளடக்கிய சிறப்பு அட்டையை அறிமுகப்படுத்தியது. அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இந்த முறை விக்டோரியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

விக்டோரியன் சூதாட்டம் மற்றும் கேசினோ கட்டுப்பாட்டு ஆணையம், டிசம்பர் 1, 2025க்குப் பிறகு, எந்த Poker இயந்திரமும் குறைந்தபட்சம் 3 வினாடிகளுக்கு எல்லா நேரங்களிலும் சுழல வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

இச்செயற்பாட்டின் மூலம் போக்கர் இயந்திரங்களின் செயற்பாடுகள் 40 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும் இதனால் சூதாட்டக்காரர்கள் இழக்கும் பணத்தினை குறைக்க முடியும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...