Cinemaநயன்தாரா மீது வழக்கு தொடர்ந்துள்ள தனுஷ்!

நயன்தாரா மீது வழக்கு தொடர்ந்துள்ள தனுஷ்!

-

திருமண ஆவணப் படத்தில் ‘நானும் ரெளடி தான்’ படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை தென்னிந்திய நடிகை நயன்தாரா அனுமதியின்றி பயன்படுத்திய விவகாரத்தில் நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் சென்னை மேல் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தனுஷின் குற்றச்சாட்டு தொடர்பாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் பதில் அளிக்கவும் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து கடந்த 2022, ஜூன் 9 ஆம் திகதி திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களின் திருமண நிகழ்வுகளை ஆவணப்படுத்தி பியாண்ட் தி ஃபேரி டேல் (beyond the fairy tale) என்ற பெயரில் உருவான படத்தின் ஒளிபரப்பு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இந்த ஆவணப்படம் கடந்த நவம்வர் 18 ஆம் திகதி வெளியானது.

முன்னதாக, இந்த ஆவணப் படத்தில் நடிகர் தனுஷின் வோண்டர்பார் நிறுவனம் தயாரித்த ‘நானும் ரௌடி தான்’ படத்தில் பணியாற்றிய நயன்தாரா, அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இடம்பெற்ற சில நொடி காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

இதற்கு எதிராக 10 கோடி இந்திய ரூபாய் கேட்டு நயன்தாராவுக்கு தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து தனுஷ் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து நயன்தாரா ஒரு 3 பக்க அறிக்கையை வெளியிட்டார்.

இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந் நிலையில் நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ், சென்னை மேல் நீதிமன்றில் இன்று வழக்கு தொடர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

மன்னர் சார்லஸை சந்தித்த தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர்

தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் Peter Malinauskas, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் மன்னர் சார்லஸை சந்தித்து, மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து கலந்துறையாடியுள்ளார். Malinauskas-இன் ஏழு...

Aldi-இல் இருந்து புதிய சூரிய ஆற்றல் சேவை

Aldi பல்பொருள் அங்காடி சங்கிலி விக்டோரியாவில் உள்ள மக்களுக்கு சூரிய சக்தி மற்றும் பேட்டரி தொகுப்புகளை வழங்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, 10kWh பேட்டரி, 6.6kW சோலார் சிஸ்டம்...

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் அரசியல் ஆர்வலர்

பிரபல அமெரிக்க வர்ணனையாளரும் கன்சர்வேடிவ் கட்சி ஆர்வலருமான Charlie Kirk, சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் உட்டாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த வெளிப்புற...

ANU துணைவேந்தர் ராஜினாமா செய்தார்

பல மாத சர்ச்சைகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை Genevieve Bell ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் 13வது துணைவேந்தராக Genevieve Bell...

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் அரசியல் ஆர்வலர்

பிரபல அமெரிக்க வர்ணனையாளரும் கன்சர்வேடிவ் கட்சி ஆர்வலருமான Charlie Kirk, சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் உட்டாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த வெளிப்புற...

ANU துணைவேந்தர் ராஜினாமா செய்தார்

பல மாத சர்ச்சைகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை Genevieve Bell ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் 13வது துணைவேந்தராக Genevieve Bell...