Newsகிழக்கு உகண்டாவில் மண்சரிவு - 13 பேர் பலி!

கிழக்கு உகண்டாவில் மண்சரிவு – 13 பேர் பலி!

-

கிழக்கு உகண்டாவில் உள்ள 6 கிராமங்களில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 40 வீடுகள் மண்ணுக்குள் புதைந்ததில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இதுகுறித்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள உகண்டா செஞ்சிலுவைச் சங்கத்தினர் கூறுகையில், “மண்ணில் புதைந்த 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், மண்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது” என்றனர்.

மண்ணில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 பேர் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உள்ளூர் பத்திரிகைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உகண்டாவில் அடிக்கடி மண்சரிவுகள் ஏற்படுவது வழக்கமானது. ஆனால், புதன்கிழமை இரவு பெய்த கடுமையான மழையின் காரணமாக புலம்புலி மாவட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

அதிநவீன புல்டோசர் வாகனம் கொண்டு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருப்பதால் மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மண்சரில் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேரிடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய சந்தைக்கு வரும் ஒரு புதிய மின்சார கார்

இந்த ஆண்டு ஆஸ்திரேலிய சந்தையில் ஒரு புதிய மின்சார கார் வர உள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்களால் மலிவு விலையில் வாங்கக்கூடிய Hatchback ரக கார்கள் சந்தைக்கு வர...

நீண்ட வார இறுதியில் விக்டோரியாவுக்குச் செல்வோருக்கான சிறப்பு அறிவிப்பு

வரவிருக்கும் நீண்ட வார இறுதியில் பயணம் செய்யத் திட்டமிடும் விக்டோரியர்களுக்கு அதிகாரிகள் சிறப்பு பாதுகாப்பு ஆலோசனைகளை வெளியிட்டுள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளில் காட்டுத்தீ இன்னும் தீவிரமாக உள்ளது. காட்டுத்தீ...

மீண்டும் இயக்கப்படும் உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம்

ஜப்பானில் உள்ள உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில்...

ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாட வருபவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

வரும் 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு, சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை பலத்த பாதுகாப்பு வளையத்துடன் மூட...

ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாட வருபவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

வரும் 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு, சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை பலத்த பாதுகாப்பு வளையத்துடன் மூட...

12 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்த சிட்னி Lockout சட்டங்கள்

சிட்னியின் இரவு நேர பொருளாதாரத்தை கடுமையாக பாதித்த Lockout சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட 12வது ஆண்டு நிறைவையொட்டி, Minns தொழிற்கட்சி அரசாங்கம் அந்தச் சட்டங்கள் முற்றிலுமாக ரத்து...