Newsவிக்டோரியா உட்பட பல மாநிலங்களில் இந்த வார இறுதியில் பலத்த மழை...

விக்டோரியா உட்பட பல மாநிலங்களில் இந்த வார இறுதியில் பலத்த மழை மற்றும் புயல் எச்சரிக்கை

-

இந்த வார இறுதியில், ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் கனமழை மற்றும் சூறாவளி ஏற்படும் அபாயம் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ், கிழக்கு விக்டோரியா மற்றும் வடக்கு டாஸ்மேனியா ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்படும் என வானிலை ஆய்வு மையத்தின் மூத்த வானிலை ஆய்வாளர் மிரியம் பிராட்பரி தெரிவித்துள்ளார்.

கனமழையால் மாநிலத்தின் சில பகுதிகளில் திடீர் வெள்ள அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விக்டோரியா மாநிலத்தில் இடியுடன் கூடிய மழை படிப்படியாக குறைந்துள்ள நிலையில், குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மழையுடன் கூடிய காலநிலை குறைவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா பிரதேசங்களில் அடுத்த 72 மணித்தியாலங்களில் 30 மில்லிமீற்றர் முதல் 60 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...

2 விமான நிறுவனங்களில் Power Bank-இற்கு தடை

Qantas மற்றும் Virgin Australia விமான நிறுவனங்கள் விமானங்களில் Power Banks-ஐ பயன்படுத்துவதைத் தடை செய்யத் தயாராகி வருகின்றன. லித்தியம் பேட்டரிகளால் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில்...

இஸ்ரேலில் இருந்து உலகின் முதல் 3D-Bioprinted Cornea மாற்று அறுவை சிகிச்சை

உலகின் முதல் 3D-Bioprinted Cornea இஸ்ரேலில் ஒரு நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலிய மருத்துவர்கள் மனித திசுக்களை தானம் செய்வதற்குப் பதிலாக, கடுமையான பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட...

ஆஸ்திரேலியா முழுவதும் வேகமாகப் பரவும் ஒரு நோய்

Meningococcal எனப்படும் வேகமாகப் பரவும் நோய் குறித்து பெற்றோர்களும் குழந்தைகளும் விழிப்புடன் இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் 102 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில்...

Fina புயல் வலுவடைவதற்கான அறிகுறிகள்

வெப்பமண்டல சூறாவளி Fina வடக்கு பிரதேசத்தின் கடற்கரையை அடைந்துள்ளது. நேற்று புயல் 1-வது வகையாக வலுவிழந்தது, ஆனால் இன்று அது மீண்டும் செயல்படும் என்று வானிலை ஆய்வு...

மெல்பேர்ண் நாடாளுமன்ற உறுப்பினரை தொலைபேசியில் மிரட்டிய நபர் பணிநீக்கம் 

மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினரை துன்புறுத்தியதற்காக மெல்பேர்ண் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மிரட்டல் மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைப் பெறுவதாகப்...