Cinemaவெளியானது விடாமுயற்சி டீசர்!

வெளியானது விடாமுயற்சி டீசர்!

-

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விடாமுயற்சி திரைப்படத்தின் டீஸர் இறுதியாக க்டந்த 28ம் திகதி வெளியானது.

“எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு” என அட்டகாசமான வரிகளுடன் இந்த டீசர் ஹொலிவூட் பட தரத்துக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

அதில் திரைப்படம் எதிர்வரும் பொங்கலுக்கு வெளியாகும் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் மற்றும் அர்ஜூன் உள்ளிட்டோர் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் கடந்த 2 ஆண்டுகளாக அநேகமான தடைகளை தாண்டி உருவாகி வருகிறது.

இந்த நிலையில் படத்தின் டீசர் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்றிரவு 11.08 மணியளவில் வெளியாகியுள்ளது.

இதனால், உற்சாகம் அடைந்துள்ள அஜித் ரசிகர்கள், மகிழ் திருமேனி அஜித்தை வைத்து தரமான சம்பவம் செய்துள்ளார் எனக் கூறி டீசரை வைரல் ஆக்கும் முயற்சியில் நேற்றிரவு முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

குட் பேட் அக்லி பொங்கல் ரிலீஸ் ஆகும் என மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்து வந்த நிலையில், அஜித் குமார் முதலில் விடாமுயற்சி படம் வரட்டும் என முடிவு செய்து அந்த படத்தின் பேட்ச் வொர்க்கையும் முடித்த நிலையில், தற்போது பொங்கல் 2025 ஆம் ஆண்டு விடாமுயற்சி தான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

செயலிழப்பிற்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்ட Optus சேவைகள்

நியூ சவுத் வேல்ஸின் Hunter பகுதியில் ஏற்பட்ட மின் தடைகளுக்குப் பிறகு சேவைகள் மீட்டமைக்கப்பட்டுள்ளதாக Optus கூறுகிறது. Hexham – Maitland சாலையில் உள்ள ஒரு மொபைல்...

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...