Newsஉடனடியாக திரும்பப் பெறப்படும் Toyota Corolla மாடல்கள்

உடனடியாக திரும்பப் பெறப்படும் Toyota Corolla மாடல்கள்

-

உற்பத்தி பிரச்சனையான ஸ்டீயரிங் கட்டுப்பாட்டில் ஏற்பட்டுள்ள பிழைகள் காரணமாக 3 வகையான Toyota Corolla கார்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

2023 மற்றும் 2024 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட Corolla Cross (MXGA10R), Corolla Cross Hybrid (MXGH10R) மற்றும் Corolla Sedan Hybrid (ZWE219R) மாடல்களின் 1270 க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த சிக்கலான சூழ்நிலையின் மூலம் பாதிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Corolla Cross Hybrid (Atmos, GX, GXL), Corolla Cross Petrol (Atmos, GX, GXL) மற்றும் Corolla Sedan Hybrid (Acset sport, SX) வாகனங்களிலும் இந்தச் சிக்கல் நிலை ஏற்படலாம் என இங்கு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அந்த கார் மாடல்களின் ஸ்டீயரிங் வீலில் சேதம் ஏற்படக்கூடும் என கார் நிறுவனம் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ஸ்டியரிங் கட்டுப்பாட்டை இழந்து சாலை விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த குறைபாடு உள்ள வாகனங்களை அடையாளம் காண போக்குவரத்து திணைக்களத்தின் இணையத்தளத்தில் VIN பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

நவம்பர் மாத வட்டி விகிதத்தை அறிவிக்கும் RBA

நவம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை 3.6% ஆக மாற்றாமல் வைத்திருப்பதாக RBA அறிவித்துள்ளது. இது பல ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒரு முடிவாகும். மேலும் வட்டி விகிதத்தை மாற்றாததற்கு...