உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்த சிட்னியின் புகழ்பெற்ற Luna பூங்காவை Oscars Group என்ற உள்ளூர் நிறுவனம் வாங்கியுள்ளது.
Oscars Group அதன் முந்தைய உரிமையாளர்களான Brookfield இடமிருந்து வாங்கியுள்ளது. ஆனால் அவர்கள் எவ்வளவு பணம் செலவழித்தனர் என்பது வெளியிடப்படவில்லை.
Oscars Group-இன் நிர்வாக இயக்குநர் Bill Gravanis, Luna பூங்காவை உலகின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும், சிட்னிவாசிகளின் பொழுதுபோக்கு இடமாகவும் மாற்றுவதே தனது நிறுவனத்தின் நோக்கம் என்று கூறியுள்ளார்.
CBRE ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரியும் சைமன் ரூனி, இந்த இடத்தை வாங்க சர்வதேச சமூகம் அதிக ஆர்வம் காட்டியதாக கூறுகிறார்.
இந்த இடம் சிட்னி துறைமுகத்திற்கு அருகாமையில் அமைந்திருப்பதால், இது ஒரு தனித்துவமான முதலீடு என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, லூனா பூங்காவில் சாதனைப் பயணச்சீட்டு விற்பனை இடம்பெற்றுள்ளதாகவும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் Luna Park இன் CEO John Hughes தெரிவித்துள்ளார்.