மெல்பேர்ண் ஓரின சேர்க்கை போட்டிகளை நடத்தும் முயற்சியில் இருந்து விலகியுள்ளது.
விக்டோரியா மாநில அரசுக்கு விளையாட்டுப் போட்டிகளுக்குத் தேவையான நிதியை வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக 2030ஆம் ஆண்டு நடைபெறவிருந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நடவடிக்கையில் இருந்து மெல்பேர்ண் விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை, ஓரின சேர்க்கை போட்டிகளை நடத்துவதற்கு பொருத்தமான நகரங்களின் பட்டியலில் மெல்பேர்ண் இடம் பெற்றுள்ளமையும் விசேட அம்சமாகும்.
மேலும் 4 வருடங்களுக்கு ஒருமுறை போட்டிகள் நடத்தப்படும் எனவும், நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்கான தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியாவின் ஏல ஆலோசனைக் குழுவின் தலைவரான ஜஸ்டின் டல்லா ரிவா, நிதியுதவிக்கு விக்டோரியா அரசாங்கத்தின் பதிலைத் தொடர்ந்து மெல்பேர்ண் நடத்துவதற்கான ஏல செயல்முறையிலிருந்து விலகியதாகக் கூறினார்.
விக்டோரியா மாநிலத்தில் LGBTQ + சமூகத்திற்கான திட்டங்கள் தொடர்பான காலண்டர் வெளியிடப்பட்டுள்ளதாக விக்டோரியா அரசு தெரிவித்துள்ளது.