Newsஆஸ்திரேலியாவில் கடல் உணவு பிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

ஆஸ்திரேலியாவில் கடல் உணவு பிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

-

ஆஸ்திரேலியாவில் உள்ள கடல் உணவு பிரியர்களுக்கு இந்த பண்டிகைக் காலம் அதிக லாபம் தரும் என்று ஆஸ்திரேலியா கடல் உணவுத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, Seafood Lover வாடிக்கையாளர்கள் இம்முறை குறைந்த விலையில் உயர்தர இறால்களை வாங்க முடியும் என ஆஸ்திரேலியா கடல் உணவுத் துறையின் பிரதம நிறைவேற்று அதிகாரி வெரோனிகா பாபகோஸ்டா தெரிவித்தார்.

மெல்பேர்ணில் உள்ள நுகர்வோர் இந்த ஆண்டு இறால் மீது $10 முதல் $20 வரை சேமிக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறால் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு கிலோ நடுத்தர அளவிலான இறால் தற்போது $29.99 முதல் $35 வரை விற்பனையாகிறது.

மேலும் ஒரு கிலோ பெரிய அளவிலான இறால் $40 முதல் $50 வரை இருக்கும், அதே சமயம் ஒரு கிலோ இறாலின் விலை கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் $60 முதல் $65 வரை மதிப்பிடப்பட்டது.

எவ்வாறாயினும், விலை குறைப்பினால் உணவின் தரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ஆஸ்திரேலியா கடல் உணவு நிறுவனம் தெரிவித்திருந்தது.

உயர்தர தயாரிப்புகள் பல்பொருள் அங்காடிகள் மற்றும் ஆன்லைன் இணையதளங்களில் ஏராளமாக கிடைக்கின்றன. மேலும் கடல் உணவுத் தொழில் இந்த பண்டிகைக் காலத்தில் சாதனை லாபத்தை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...