விக்டோரியா மாநிலத்தில் வசிக்கும் இலங்கையர்களின் ஆங்கில மொழி கல்வியறிவு குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மெல்பேர்ண் விக்டோரியாவின் இணையதளத்தில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன்படி, விக்டோரியா மாநிலத்தில் வசிக்கும் இலங்கையர்களில் 72.7% பேர் ஆங்கில மொழியை மிகச் சிறப்பாகக் கையாள முடியும் என அறிவித்துள்ளனர்.
மாநிலத்தில் வசிக்கும் இலங்கையர்களில் 4.6% தங்களால் ஆங்கில மொழியை நன்றாகக் கையாள முடியாது என்று கூறியுள்ளனர்.
இதேவேளை, விக்டோரியா மாநிலத்தில் வாழும் இலங்கையர்களில் 22.4% பேர் ஆங்கிலம் மட்டுமே பேசுகின்றனர்.
இம்மாநிலத்தில் வாழும் இலங்கையர்களின் ஆங்கில மொழிப் புலமை அதிகமாக இருப்பதையே இந்தத் தரவுகள் காட்டுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.