Melbourneமெல்பேர்ணில் யூத தேவாலயத்துக்கு தீ வைப்பு!

மெல்பேர்ணில் யூத தேவாலயத்துக்கு தீ வைப்பு!

-

அவுஸ்திரேலிய நகரமான மெல்பேர்ணில் வெள்ளிக்கிழமை (06) அதிகாலையில் முகமூடி அணிந்த விசமிகள், அங்கு அமைந்துள்ள யூத தேவாலயத்துக்கு தீ வைத்துள்ளனர்.

இது நாடு முழுவதும் பரவலான கண்டனத்தைத் தூண்டியது.

அடாஸ் இஸ்ரேல் ஜெப ஆலயத்தில் அந் நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 4:10 மணிக்கு (1710 GMT) சில பக்தர்கள் உள்ளே இருந்தபோது தீ வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், தென்கிழக்கு மெல்பேர்ண் புறநகர் ரிப்போன்லியாவில் உள்ள கட்டிடத்தின் பெரும்பகுதி எரிந்து தீக்கிரையாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால், எவருக்கும் கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படவில்ல‍ை என ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் அந்தோனி அல்பானீஸ், அவுஸ்திரேலியாவில் யூத எதிர்ப்புக்கு இடமில்லை என்றார்.

அதேநேரம், ஒரு வழிபாட்டுத் தலத்தில் இந்த வன்முறை, அச்சுறுத்தல் என்பது மூர்க்கத்தனமானது. இந்த தாக்குதல் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது மற்றும் சமூகத்தில் அச்சத்தை உருவாக்குவதை தெளிவாக நோக்கமாகக் கொண்டுள்ளதும் அவர் குறிப்பிட்டார்.

விக்டோரியா மாநில காவல்துறையும் பயங்கரவாத எதிர்ப்பு பொலிசாரும் கூட்டிணைந்து இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்

விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...