The Wizard of Oz-இல் ஜூடி கார்லண்ட் அணிந்திருந்த ஒரு ஜோடி ரூபி காலணிகள் ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு ஒரு அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது. இது கடந்த சனிக்கிழமை ஏலத்தில் $28 மில்லியனுக்கு (A$43 மில்லியன்) வெற்றிகரமான விற்கப்பட்டது.
ஹெரிடேஜ் ஏலதாரர்கள் இந்த ஜோடி காலணிகள் $3 மில்லியன் அல்லது அதற்கு மேல் விற்கப்படும் என மதிப்பிடுகின்றனர்.
ஆனால் ஏலம் சில நிமிடங்களில் சாதனைகளை தாண்டியதாக கூறப்படுகிறது.
2005 ஆம் ஆண்டில், டெர்ரி ஜான் மார்ட்டின் அருங்காட்சியகத்தின் கதவை உடைத்து, குறித்த ஜோடி காலணிகள் வைக்கப்பட்டிருந்த காட்சி பெட்டியை உடைத்து, ஜோடி காலணிகளைத் திருடினார்.
மினசோட்டாவில் உள்ள அவரது சொந்த ஊரான கிராண்ட் ரேபிட்ஸில் உள்ள ஜூடி கார்லண்ட் அருங்காட்சியகத்தில் இந்த செருப்புகள் காட்சிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.