உலகின் பணக்கார பில்லியனர்களின் முதல் வேலைகள் குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது.
இந்த அறிக்கையை World of Statistics இணையதளம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, உலகின் மிகப் பெரிய பணக்காரராகக் கருதப்படும் Elon Musk முதலில் பாய்லர் ரூம் கிளீனராகப் பணிபுரிந்துள்ளார்.
Amazon நிறுவனத்தைச் சேர்ந்த Jeff Bezos தனது முதல் வேலையாக மெக்டொனால்டில் சமையல்காரராகப் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Apple நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் முதல் வேலை இயந்திரம் அசெம்பிளி செய்யும் தொழிலாளி என்று அது கூறுகிறது .
இதேவேளை, Microsoft நிறுவனர் Billgates தனது முதல் வேலையாக Computer Programmer-ஆக பணிபுரிந்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.