Cinemaபுஷ்பா - 2 வெளியாகி 5 நாட்களில் 922 கோடி வசூலித்து...

புஷ்பா – 2 வெளியாகி 5 நாட்களில் 922 கோடி வசூலித்து சாதனை

-

இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘புஷ்பா 2 தி ரூல்’. இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.

முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் கடந்த டிசம்பர் 5 ஆம் திகதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது.

‘புஷ்பா 2’ முதல் நாள் வசூலாக (இந்திய ரூபா)294 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், இதுவரை இந்தியன் சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகம் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் 5 நாள் வசூல் விவரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் வெளியாகி 5 நாட்களில் (இந்திய ரூபா)922 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. நாளை இத்திரைப்படத்தின் வசூல் 1000 கோடி ரூபாயை தொடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Latest news

வத்திக்கானில் பாப்பரசருக்காக பிரார்த்திக்கும் மக்கள்

பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், வத்திக்கான் சதுக்கத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, அவர் உடல் நலன் பெற வேண்டும்...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் கோகோடாவைப் பார்வையிட அனுமதி

பப்புவா நியூ கினியாவில் உள்ள புகழ்பெற்ற கோகோடா பாதை பார்வையாளர்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் 96 கிலோமீட்டர் நீளமுள்ள கோகோடா பாதையில் மலையேறுகிறார்கள். பப்புவா...

40வது பிறந்தநாளைக் கொண்டாடிய பேஸ்புக் நிறுவனரின் மனைவி

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் மனைவி பிரிசில்லா சான் கடந்த 24ம் திகதி தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடினார். பெப்ரவரி 24, 1985 இல் பிறந்த இவர்,...

ஆஸ்திரேலியாவில் ஆரஞ்சு ஜூஸ் குடிக்க வேண்டாம் கோரிக்கை

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு தனியார் பான நிறுவனம் தனது தயாரிப்பான ஆரஞ்சு பழச்சாறு வாங்குவதைத் தவிர்க்குமாறு மக்களிடம் கோரிக்கை விடித்துள்ளது. இந்த ஆரஞ்சு சாறு பானத்தில் Alcohol...