Mobility Arrangement for Talented Early-professionals Scheme (MATES) எனப்படும் புதிய பைலட் திட்டம், இந்தியாவில் இருந்து இளம் தொழில் வல்லுநர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு ஆஸ்திரேலியாவில் வேலை செய்வதை எளிதாக்கியுள்ளது.
இந்த திட்டம் இந்திய பல்கலைக்கழக பட்டதாரிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஆஸ்திரேலியாவில் இரண்டு ஆண்டுகள் வரை வாழவும் வேலை செய்யவும் வாய்ப்பளிக்கிறது.
மேலும், விண்ணப்ப காலம் நேற்று முதல் துவங்கி, 30 நாட்கள் விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுரங்கம், பொறியியல், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, நிதி தொழில்நுட்பம் மற்றும் விவசாய தொழில்நுட்பம் ஆகியவை தகுதியான துறைகளில் அடங்கும்.
விண்ணப்பம் 30 நாட்களுக்கு ஏற்றுக்கொள்ளப்படும் மற்றும் விண்ணப்பம் ஜனவரி 7, 2025 அன்று முடிவடையும்.
அதன்படி ஜனவரி 8ஆம் திகதி முதல் மே 30ஆம் திகதி வரை தகுதியான இந்தியர்கள் தேர்வு நடைபெறும் என்றும், அதில் தகுதி பெற்ற 3000 இந்தியர்கள் இரண்டு ஆண்டுகள் நாட்டில் தங்கி படித்து பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.