அநீதியான முறையில் காப்புறுதி விகிதங்களை உயர்த்தியமை தொடர்பில் அவுஸ்திரேலிய தனியார் காப்புறுதி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காப்பீட்டு விகிதங்களை உயர்த்த தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பல்வேறு யுக்திகளை (Phoenixing) பயன்படுத்துவதை Commonwealth Ombudsman அடையாளம் கண்டுள்ளார்.
சுமார் 29 அவுஸ்திரேலிய சுகாதார காப்புறுதி நிறுவனங்கள் எதிர்வரும் வருடத்தில் காப்புறுதி விகிதங்களை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ள நிலையில், மத்திய அரசாங்கம் காப்புறுதி நிறுவனங்களுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதன்படி, Phoenixing சுகாதார காப்பீட்டு திட்டத்தின் மூலம், ஒரு வருட காலப்பகுதியில் அதன் கட்டணம் சுமார் 21% அதிகரித்தது, இது காப்பீட்டு கட்டணத்தை உயர்த்துவது போன்ற செயல் என்று சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் வலியுறுத்தியுள்ளார்.
மூன்று வருடங்கள் என்ற குறுகிய காலப்பகுதியில் பல காப்புறுதி நிறுவனங்கள் தமது காப்புறுதி விகிதங்களை 47% அதிகரித்துள்ளதாக முறைப்பாடுகள் எழுந்ததையடுத்து, Commonwealth Ombudsman இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
Phoenixing வழக்கை சட்டவிரோதமான முறையாக மாற்றும் வகையில் எதிர்காலத்தில் புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும் என சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் வலியுறுத்தியுள்ளார்.