Newsசாக்லேட் அல்லது Chips சாப்பிடுபவர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

சாக்லேட் அல்லது Chips சாப்பிடுபவர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

-

ஒரு நாளைக்கு ஒரு chocolate bar அல்லது ஒரு பாக்கெட் chips சாப்பிடுவதன் மூலம், ஒரு நபரின் உயிரியல் வயது (Biological Age) சில மாதங்களில் அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மெல்பேர்ணில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு, இயற்கையான வயதான செயல்முறைக்கும் உயிரியல் வயதுக்கும் இடையிலான உறவைப் படிக்கும் நோக்கத்துடன் இந்த ஆய்வை நடத்தியது.

இங்கு, அமெரிக்காவில் வசிக்கும் 16,000 பேரின் தினசரி உணவு குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 2000 கலோரி உணவில் 10% கலோரிகள் பிஸ்கட், செயற்கை பானங்கள், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் போன்ற உணவுகளில் இருந்து வந்தால், அந்த உணவை உண்பவருக்கு உயிரியல் ரீதியாக சுமார் 2.4 மாதங்கள் வயதாகிவிடும் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தப் பின்னணியில், ஆஸ்திரேலிய பெரியவர்களில் 40% பேர் செயற்கையாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதாக கார்டோசோ சுட்டிக்காட்டுகிறார்.

உணவுப் பொட்டலங்களில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் மற்றும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட உணவுகளில் இருந்து தயாரிக்கப்படும் கலவைகள் போன்றவற்றால் மனிதனின் உயிரியல் வயது அதிகரிக்கும் என்பது இந்த ஆய்வின் மூலம் மேலும் தெரியவந்துள்ளது.

Latest news

சீனாவில் மனிதர்களைத் தாக்க முயன்ற ரோபோ

சீனாவில் ரோபோ ஒன்று மனிதர்களைத் தாக்க முற்படுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சீனா நாட்டின் சைனீஸ் திருவிழா ஒன்றில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன....

வத்திக்கானில் பாப்பரசருக்காக பிரார்த்திக்கும் மக்கள்

பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், வத்திக்கான் சதுக்கத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, அவர் உடல் நலன் பெற வேண்டும்...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் கோகோடாவைப் பார்வையிட அனுமதி

பப்புவா நியூ கினியாவில் உள்ள புகழ்பெற்ற கோகோடா பாதை பார்வையாளர்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் 96 கிலோமீட்டர் நீளமுள்ள கோகோடா பாதையில் மலையேறுகிறார்கள். பப்புவா...

40வது பிறந்தநாளைக் கொண்டாடிய பேஸ்புக் நிறுவனரின் மனைவி

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் மனைவி பிரிசில்லா சான் கடந்த 24ம் திகதி தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடினார். பெப்ரவரி 24, 1985 இல் பிறந்த இவர்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் கோகோடாவைப் பார்வையிட அனுமதி

பப்புவா நியூ கினியாவில் உள்ள புகழ்பெற்ற கோகோடா பாதை பார்வையாளர்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் 96 கிலோமீட்டர் நீளமுள்ள கோகோடா பாதையில் மலையேறுகிறார்கள். பப்புவா...

150 ஆண்டுக்கு பிறகு Queen Victoria Market நடந்த வேலைநிறுத்தம்

மெல்பேர்ண் குடியிருப்பாளர்களிடையே பிரபலமான சந்தையான குயின் விக்டோரியா சந்தையில், அதன் 150 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பொருளாதார இழப்புகளை மறைக்க மெல்பேர்ண்...