Boxing Day தினத்துடன் இணைந்து நடைபெறும் இந்திய-ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் டிக்கெட் விற்பனை தற்போது முடிவடைந்துள்ளது.
அவுஸ்திரேலியா வெற்றியுடன் நேற்று முடிவடைந்த இந்திய-ஆஸ்திரேலியா இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு Boxing Day டெஸ்ட் போட்டிக்கு பார்வையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) வரும் 26ம் திகதி தொடங்க உள்ள Boxing Day டெஸ்ட் போட்டிக்கான சிறிய அளவிலான டிக்கெட்டுகள் டிசம்பர் 24ம் திகதி மீண்டும் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், புத்தாண்டு தினத்தன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் (SCG) நடைபெறவுள்ள
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதி டெஸ்ட் போட்டியின் முதல் மூன்று நாட்களுக்கு வழங்கப்பட்ட A மற்றும் B டிக்கெட்டுகளும் வேகமாக விற்பனையாகி வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மூன்று நாட்களில் அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 135,012 பேர் கலந்து கொண்டு சாதனை படைத்தமையும் சிறப்பு.
மேலும் இந்த போட்டியை டிஜிட்டல் ஸ்பேஸ் மூலம் ஏராளமான பார்வையாளர்கள் கண்டுகளித்தது குறிப்பிடத்தக்கது.