News000 அவசரநிலை அழைப்புகளை இணைப்பதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு - டெல்ஸ்ட்ராவிற்கு...

000 அவசரநிலை அழைப்புகளை இணைப்பதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு – டெல்ஸ்ட்ராவிற்கு விதிக்கப்பட்ட அபராதம்

-

இந்த ஆண்டின் தொடக்கத்தில் 000 அவசரநிலை அழைப்புகளை இணைப்பதில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிழை காரணமாக Telstra-விற்கு $3 மில்லியனுக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிலை மார்ச் 1 ஆம் திகதி எழுந்தது. சுமார் 127 அழைப்புகளை அவசர சிகிச்சைப் பிரிவில் இணைக்க முடியவில்லை.

இந்நிலையில், ஆஸ்திரேலிய தகவல் தொடர்பு மற்றும் ஊடக ஆணையம் (Australian Communications and Media Authoriy) நடத்திய விசாரணையில், 90 நிமிடங்களில் Telstra நிறுவனம் சுமார் 473 சட்ட மீறல்களை செய்துள்ளது தெரியவந்துள்ளது .

எனினும், குறித்த நிறுவனம், காப்புத் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி, குறித்த தொலைபேசி இலக்கங்களை, குறித்த சேவைகளுடன் இணைக்க முயற்சித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்களால் 346 அழைப்புகளை வெற்றிகரமாக அனுப்ப முடிந்த போதிலும், சம்பந்தப்பட்ட அழைப்பாளர்களின் தகவல்களையும் அவர்களின் இருப்பிடங்களையும் அவசர அழைப்புப் பிரிவுக்கு வழங்க நிறுவனம் தவறிவிட்டதாக இந்த விசாரணையின் மூலம் மேலும் தெரியவந்துள்ளது.

Telstra CEO Vicky Broad, பதற்றமான சூழ்நிலையில் 000 அவசர எண்ணைத் தொடர்பு கொள்ள முயன்றபோது மாரடைப்பால் மரணமடைந்த மெல்பேர்ண் நபரின் குடும்பத்தினரிடமும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மன்னிப்புக் கோருவதாகக் கூறியுள்ளார்.

Latest news

உலகின் முதல் டிரில்லியனராக மாற எலான் மஸ்க்கிற்கு வாய்ப்பு

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கை உலகின் முதல் டிரில்லியனராக மாற்றக்கூடிய ஒரு சம்பளத் தொகுப்பை டெஸ்லா பங்குதாரர்கள் அங்கீகரித்துள்ளனர். நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில்...

மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் மேகன்

பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த மேகன் மார்க்கல், மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார். 2018 ஆம் ஆண்டு இளவரசர் ஹாரியை மணந்த பிறகு நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற மேகன்,...

ரசாயனங்கள் மீது Sunscreens உற்பத்தியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

ஆஸ்திரேலிய மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம், Sunscreenகளில் உள்ள ரசாயனங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. Sunscreen-இல் உள்ள பல வேதிப்பொருட்களை...

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறை

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறையான Great Barrier Reef-இன் எதிர்காலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. புவி வெப்பமடைதலை 2°C க்கும் குறைவாக வைத்திருந்தால், Great...

ஆஸ்திரேலிய குடியுரிமையை துறந்து இந்தியனாக மாறிய வீரர்

ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் தமது சொந்த நாட்டின் குடியுரிமையை துறந்து, இந்திய குடியுரிமையைப் பெற்றார்.  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரியான் வில்லியம்ஸ் என்ற கால்பந்து வீரர்...

வட கொரிய சைபர் குற்றவாளிகள் மீது ஆஸ்திரேலியா எடுக்கும் நடவடிக்கை

வட கொரியாவின் அழிவுகரமான ஆயுதத் திட்டங்களுக்கு நிதியளிக்கும் சைபர் குற்றவாளிகள் மீது நிதித் தடைகள் மற்றும் பயணத் தடைகளை விதிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வடகொரியாவின்...