Newsஇஸ்தான்புல் விமான நிலையத்தில் உணவின்றி சிக்கித் தவிக்கும் 400 பயணிகள்

இஸ்தான்புல் விமான நிலையத்தில் உணவின்றி சிக்கித் தவிக்கும் 400 பயணிகள்

-

துருக்கியில் இருந்து டெல்லி மற்றும் மும்பை செல்லவிருந்த சுமார் 400 இண்டிகோ பயணிகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் சிக்கித் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் விமானம் தாமதமாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டு விட்டது என பயணிகள் தங்களின் எக்ஸ் மற்றும் லின்க்டின் தளங்களில் பதிவிட்டுள்ளனர். விமான பயணிகளில் ஒருவர் தனது பதிவில், “முதலில் விமானம் இரண்டு முறை தாமதமானது, பிறகு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், 12 மணி நேரம் கழித்து விமானம் புறப்பட தயாராகும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் விமான நிலையத்தில் சிக்கித்தவிக்கும் விமான பயணிகளில் சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. மேலும், பயணிகளுக்கு தங்கும் வசதி, உணவு எதுவும் வழங்கப்படவில்லை. இண்டிகோ நிறுவனம் சார்பில் யாரும் விமான நிலையம் வரவும் இல்லை, பயணிகளை அனுகவும் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னதாக ஏர்ஹெல்ப் ஸ்கோர் வெளியிட்ட அறிக்கையின் படி உலகின் மோசமான விமான நிறுவனங்கள் பட்டியலில் இண்டிகோ இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Latest news

பொது போக்குவரத்திற்கு பெரும் சிக்கலாக மாறியுள்ள மின்-பைக்குகள்

வாரத்தில் மின்-பைக்குகளால் ஏற்படும் தீ விபத்துகள் அதிகமாகி வருவதால், மாநில அரசுகள் பொதுப் போக்குவரத்தில் வாகனங்களைச் சுற்றியுள்ள சட்டங்களை மறு மதிப்பீடு செய்து வருகின்றன. மின்-பைக்குகள் மற்றும்...

வடக்கு NSW மாநிலத்தில் அதிகரித்துள்ள பனிப்பொழிவு 

வடக்கு நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் மாநிலத்தின் பிற பகுதிகள் மழை மற்றும் காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளன. Coffs துறைமுகத்திற்கு மேற்கே...

Sturt நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து – ஒருவர் பலி

தெற்கு நியூ சவுத் வேல்ஸில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் ஒரு பெரிய நெடுஞ்சாலையும் மணிக்கணக்கில் மூடப்பட்டது. வெள்ளிக்கிழமை நண்பகல், வாகா வாகாவிலிருந்து...

மீண்டும் வெடித்த இந்தோனேசியாவின் Lewotobi Laki-Laki மலை

இந்தோனேசியாவின் Mount Lewotobi Laki-laki வெடித்து, 10 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சாம்பல் மேகத்தை வானத்தில் கக்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8:48 மணிக்கு எரிமலை...

மீண்டும் வெடித்த இந்தோனேசியாவின் Lewotobi Laki-Laki மலை

இந்தோனேசியாவின் Mount Lewotobi Laki-laki வெடித்து, 10 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சாம்பல் மேகத்தை வானத்தில் கக்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8:48 மணிக்கு எரிமலை...

இஸ்ரேலிய அதிகாரிகளின் மிருகத்தனமான நடத்தையை விவரித்த காசாவிற்கு உதவி பெற்ற ஆஸ்திரேலியர்கள்

காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்த இரண்டு ஆஸ்திரேலிய குடிமக்கள் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பின்னர் நேற்று காலை சிட்னிக்குத் திரும்பினர். இஸ்ரேலிய...