Cinemaகைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்ட பிரபல நடிகர்

கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்ட பிரபல நடிகர்

-

இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி (டிசம்பர் 5) வெளியான திரைப்படம் புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் வெளியான நிலையில், புஷ்பா 2 திரைப்படத்தை பார்க்க சென்றபோது ரேவதி என்ற 39 வயது பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.

உயிரிழந்த பெண்ணின் மகனும் கூட்ட நெரிசலில் சிக்கி காயமுற்ற நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஐதராபாத்தில் சிக்கடப்பள்ளியில் சந்தியா திரையரங்கில் இரவு 9.30 மணிக்கு பிரீமியர் காட்சி நடைபெறுவதாக இருந்தது. அதற்கு வந்த அல்லு அர்ஜுனைக் காண கூட்டத்தில் ரசிகர்கள் முண்டியடித்த போது இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது.

பெண் உயிரிழந்த சம்பவத்தில் திரையரங்கு மீது ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யபட்ட நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் வழக்குப்பதிவு செய்ய பொலிஸாருக்கு வழக்குப்பதிவு செய்ய திட்டமிட்டிருந்தனர்.

தொடர்ந்து, விசாரணை செய்வதற்காக ஐதராபாத் சிக்கடபல்லி பொலிஸார் அல்லு அர்ஜுனை அவரது வீட்டில் இருந்து கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அவரிடம் தொடர்ந்து 2 மணி நேரமாக விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜூனுக்கு தெலுங்கானா நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...