Cinemaகூகுளில் அதிகளவு தேடப்பட்ட இளம் தமிழ் இசைக்கலைஞர்

கூகுளில் அதிகளவு தேடப்பட்ட இளம் தமிழ் இசைக்கலைஞர்

-

2024ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த ஆண்டு பொதுமக்களால் இணையத்தில் அதிகம் தேடப்பட்டவை குறித்த பட்டியலில் 10 இடங்களை கூகுள் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், நடப்பாண்டில் இந்திய அளவில் கூகுளில் தேடப்பட்ட பாடல்களின் பட்டியலின் முதல் 10 இடங்களில் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் ‘கட்சி சேர’ பாடல் 4-ஆம் இடத்தையும், ‘ஆச கூட’ பாடல் 9-ஆம் இடத்தையும் பெற்றுள்ளது.

உலக அளவில் கூகுளில் தேடப்பட்ட பாடல்களின் பட்டியலில் ‘கட்சி சேர’ பாடல் 10ஆம் இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ள 20 வயதான சாய் அபயங்கர் கட்சி சேர மற்றும் ஆசை கூட என இரண்டு ஆல்பம் பாடல்களை பாடி இணையத்தில் வெளியிட்டார். இந்த பாடல்கள் இணையதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்க இருக்கும் சூர்யா 45-ல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பதிலாக இசையமைப்பாளராக சாய் அபயங்கர் இணைந்துள்ளார்.

முன்னதாக, ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ படத்தில் சாய் அபயங்கர் இசையமைப்பாளராக இணைந்து பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

விக்டோரியா பல்பொருள் அங்காடிகளில் அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு

விக்டோரியாவில் உள்ள பல பல்பொருள் அங்காடிகளில் இன்னும் முட்டை தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் புகார் தெரிவிக்கின்றனர். நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் முழுவதும் பறவைக் காய்ச்சல் வேகமாகப்...

திரும்ப அழைக்கப்படும் Digital Tab

கோல்ஸ் பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் குழந்தைகள் வரைவதற்குப் பயன்படுத்தப்படும் Digital Tab சாதனமானது "கடுமையான அல்லது அபாயகரமான காயங்களை ஏற்படுத்தும்" என்ற அச்சம் காரணமாக திரும்ப...

நீண்ட வார இறுதியில் மெல்போர்ன் விமான நிலையத்தில் விமானங்கள் தாமதமாகும் சாத்தியம்

ஆஸ்திரேலிய தின நீண்ட வார இறுதிக்கு விமானங்களை முன்பதிவு செய்துள்ள ஆஸ்திரேலியர்களுக்கு விமான நிலைய தாமதங்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிட்னி, பிரிஸ்பேர்ண் மற்றும் மெல்பேர்ண்...

இந்த ஆண்டு வேலை மாறும் ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் பலர்

ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் பலர் இந்த ஆண்டு புதிய வேலைக்குச் செல்வார்கள் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. வேலை ஆட்சேர்ப்பு நிபுணரான ராபர்ட் வால்டர்ஸ், ஆஸ்திரேலியாவின் white-collar என்று...