இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் ஒரு தம்பதியினர் தங்கள் குழந்தைக்கு பெயர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.
மகனின் பெயருக்காக சுமார் மூன்று வருட மோதல்கள் ஏற்பட்ட பிறகு அவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
மனைவி வைத்த பெயரை விரும்பாத கணவர், அவரையும், குழந்தையையும் நிராகரித்துள்ளார்.
இருவரும் மூன்று வருடங்கள் பிரிந்து வாழ்ந்தனர், பின்னர் கணவர் மீது இழப்பீடு கோரி மனைவி வழக்கு தொடர்ந்தார்.
எவ்வாறாயினும், முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிமன்றம் தம்பதியரின் குழந்தைக்கு பெயரை பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றம் பரிந்துரைத்த பெயரை இருவரும் விரும்பியதையடுத்து, குழந்தைக்கு அந்த பெயரை சூட்டி விவாகரத்து முடிவை ஒதுக்கிவிட்டு நீதிமன்ற வளாகத்திற்கு மாலை அணிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.