சட்டவிரோத போதைப்பொருள் குற்றச்சாட்டில் பாலியில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மெல்பேர்ண் இளைஞர் சிறைத்தண்டனையை முடித்துக்கொண்டு ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார்.
இதன்படி, 19 வருடங்களாக பாலி சிறையில் இருந்த அவர் விடுதலையான போது அவருக்கு வயது 38 எனத் தெரிவிக்கப்படுகிறது.
38 வயதான மேத்யூ நார்மன், ஜீலாங்கில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டபோது அவர் 18 வயது வாலிபராக இருந்தார்.
அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவிற்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் படி , பாலியில் போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட அவுஸ்திரேலியரை 19 வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் மீண்டும் அவுஸ்திரேலியாவிற்கு அழைத்து வர முடியும்.
அவுஸ்திரேலியாவிற்கு வருகை தந்த அவரை வரவேற்க மேத்யூ நார்மனின் குடும்பத்தினர் அங்கு வந்திருந்ததாகவும் அவர் விக்டோரியாவில் தனது வாழ்க்கையை புதிதாக ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.