Cinemaநடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க தீர்மானம்

நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க தீர்மானம்

-

பல பிராந்திய மொழிகளில் வெற்றிப் படங்களைக் கொடுத்து தன்னை மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமாக நிலைநிறுத்தி உள்ளது குளோபல் ஒன் ஸ்டுடியோஸ். அவர்கள் இப்போது நகைச்சுவை மேதை, நடிகர், பாடகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை பயோபிக்காக எடுக்க அவரது சகோதரர் ஜவஹரிடமிருந்து உரிமை பெற்றுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மூத்த எழுத்தாளரும் இயக்குநருமான கே. ராஜேஷ்வர் எழுதிய ‘JP: THE LEGEND OF CHANDRABABU’ நாவலின் உரிமையை தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது.

சந்திரபாபு படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுகிறார். கதையை மேலும் மேம்படுத்த, பாடலாசிரியரும் எழுத்தாளருமான மதன் கார்க்கி கூடுதல் திரைக்கதை, வசனங்கள் மற்றும் வசீகரிக்கும் பாடல் வரிகளை எழுதுகிறார். இந்தக் கூட்டணி நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்.

இந்தப் படம் சந்திரபாபுவுக்கு மறக்க முடியாத அஞ்சலியாக இருக்கும் என குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் உறுதியாக நம்புகிறது.

ஜியோ ஸ்டுடியோஸின், துல்கர் சல்மான் நடித்த ‘ஹே சினாமிகா’ படம் மற்றும் ‘ராமன் தேடிய சீதை’, ‘சாருலதா’, ‘அலோன்’, உள்ளிட்ட திரைப்படங்களை குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு ‘கோலி சோடா- தி ரைசிங்’ வெப் தொடரையும் தயாரித்துள்ளது.

Latest news

“நான் நிரபராதி. நான் ஒரு நல்ல மனிதன்” – நீதிமன்றத்தில் வெனிசுலா அதிபர்

போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. 63 வயதான மதுரோ, நேற்று காலை நியூயார்க் கூட்டாட்சி...

குயின்ஸ்லாந்தில் வெள்ளம் – 16,000 கால்நடைகளை காணவில்லை

மழையின் விளைவுகள் வடக்கு குயின்ஸ்லாந்தில் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நதிகளின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், கால்நடைப் பண்ணைகளில் இருந்து 16,000க்கும் மேற்பட்ட விலங்குகள் காணாமல்...

சாதனை அளவு இழப்புகளை ஏற்படுத்து ஆஸ்திரேலியர்களின் Pokie போதைப் பழக்கம்

சூதாட்ட அடிமைத்தனத்தைக் கட்டுப்படுத்த சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, ஆஸ்திரேலிய மாநிலமான நியூ சவுத் வேல்ஸ் (NSW) சாதனை அளவிலான Pokie இழப்புகளை எதிர்கொள்வதாக...

அழகுசாதன அறுவை சிகிச்சை செய்து கொண்ட 38 வயது பிரபலம் மரணம்

ரஷ்யாவின் மாஸ்கோவில் அழகுசாதன அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர், பிரபல கவர்ச்சி நடிகை Yulia Burtseva காலமானார். இன்ஸ்டாகிராமில் 74,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட...

பிரபலமான மெல்பேர்ண் மைதானத்தில் தோன்றிய புதைகுழி

மெல்பேர்ணின் வடகிழக்கில் உள்ள ஒரு பிரபலமான கால்பந்து மைதானத்தில் பாரிய நிலச்சரிவு காரணமாக ஒரு பெரிய புதைகுழி தோண்டப்பட்டுள்ளது. Heidelberg-இல் உள்ள AJ Burkitt Oval-இல் உள்ள...