Breaking Newsபாலியல் வன்புணர்வு செய்ததாக இலங்கையர் மீது அவுஸ்திரேலியாவில் குற்றச்சாட்டு!

பாலியல் வன்புணர்வு செய்ததாக இலங்கையர் மீது அவுஸ்திரேலியாவில் குற்றச்சாட்டு!

-

சர்வதேச விமானத்தில் அநாகரீகமான செயலில் ஈடுபட்டமைக்காக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர் ஒருவர் வியாழனன்று (19) அவுஸ்திரேலியாவின் Broadmeadows நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

புதன்கிழமை (18) இலங்கையில் இருந்து மெல்பேர்ண் செல்லும் விமானத்தில் ​​41 வயதான குறித்த நபர், ஒரு பெண் பயணியிடம் பாலியல் வன்புணர்வு செயலில் ஈடுபட்டதாக அவுஸ்திரேலிய பெடரல் காவல்துறை (AFP) குற்றம் சாட்டியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பயணி, விமான ஊழியர்களிடம் முறையிட்டுள்ளார்.

அதன் பின்னர் விமான ஊழியர்கள் அவுஸ்திரேலிய பெடரல் காவல்துறைக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இந் நிலையில், குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு எதிராக அவுஸ்திரேலியா விமானப் போக்குவரத்து குற்றவியல் சட்டத்துக்கு அமைய குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றத்திற்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

எவ்வாறெனினும், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதி அன்று மெல்பேர்ண் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Latest news

பாலியல் பொம்மையுடன் MRI ஸ்கேன் செய்யப்பட்ட பெண் ஆபத்தான நிலையில்

ஒரு பெண்ணின் ஆசனவாயில் Sex Toy செருகப்பட்டதால், MRI ஸ்கேன் எடுக்கும்போது அவருக்கு உட்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, நோயாளிகள் MRI ஸ்கேன் எடுக்கும்போது அவர்கள்...

மேற்கு ஆஸ்திரேலிய மக்கள் தடுப்பூசி பெறுவது கட்டாயம் – சுகாதார அதிகாரிகள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் காய்ச்சல் தடுப்பூசி போடுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது . தேசிய நோய்த்தடுப்பு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, மேற்கு ஆஸ்திரேலியாவில் 65 வயதுக்குட்பட்டவர்களில் காய்ச்சல்...

நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்கும் ANZ வங்கி

ரிசர்வ் வங்கியின் அடுத்த பணவியல் கொள்கை நடவடிக்கைக்கு இன்னும் 11 நாட்கள் மீதமுள்ள நிலையில், நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்க ANZ வங்கிக்கு ரிசர்வ் வங்கி...

வரி விதிப்புக்கு எதிராக விக்டோரியன் நாடாளுமன்றம் அருகே போராட்டம்

விக்டோரியன் பாராளுமன்றத்திற்கு அருகில் தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் இணைந்தனர். விக்டோரியாவின் முன்மொழியப்பட்ட அவசர சேவை வரியை எதிர்த்துப் போராடுவதற்காக அவர்கள் நாடாளுமன்றத்தின் படிகளில்...

நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்கும் ANZ வங்கி

ரிசர்வ் வங்கியின் அடுத்த பணவியல் கொள்கை நடவடிக்கைக்கு இன்னும் 11 நாட்கள் மீதமுள்ள நிலையில், நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்க ANZ வங்கிக்கு ரிசர்வ் வங்கி...

Harryயால் குணப்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை நோயாளிகள்

தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளுக்கு வலி மற்றும் பதட்டத்தைக் குறைக்க சிகிச்சை நாய்கள் (Therapy Dog) உதவுவதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. கான்பெர்ரா மருத்துவமனை ஹாரி என்ற...