இதுவரை விக்டோரியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் 7,600 ஹெக்டேர் நிலங்கள் முற்றிலும் அழிந்துள்ளதாக மாநில அரசு உறுதி செய்துள்ளது.
மேற்கு விக்டோரியாவில் கட்டுப்பாடற்ற காட்டுத்தீயின் அபாயம் பரவி வருவதால், ஏற்கனவே அவசரகால எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன.
குறிப்பாக, Mirranatwa மற்றும் Watgania, Grampians National Park-இற்கு அருகிலுள்ள Mafeking ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆபத்தை பொருட்படுத்தாமல் நீண்ட காலம் தங்கியிருக்கும் நபர்களுக்கான பொறுப்பை ஏற்க மாட்டோம் என்று விக்டோரியா அவசர சேவைகள் தெரிவித்துள்ளது.
அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் விரைவில் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த சில மணித்தியாலங்களில் காட்டுத் தீ அபாயம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ளவர்கள் நீண்ட காலம் இருக்க முடிவு செய்தால், அவசரகால சேவைகள் உங்களுக்கு உதவ முடியாமல் போகலாம் என்று அவசர சேவைகள் விக்டோரியா மேலும் கூறியுள்ளது.