Cinemaவெளியானது விடுதலை 2 திரைப்படம்!

வெளியானது விடுதலை 2 திரைப்படம்!

-

விஜய் சேதுபதியின் விடுதலை பாகம் 2 டிசம்பர் 20 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருக்கும் வெற்றிமாறன் சூரியை கதாநாயகனாக வைத்து “விடுதலை” என்ற படத்தை இயக்கியிருந்தார்.

கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்து பாராட்டைப் பெற்றார்.

இளையராஜாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்தன.

“விடுதலை” படத்தை தொடர்ந்து அதன் 2ம் பாகம் வெளியாகும் என முன்னரே பட குழுவினர் அறிவித்திருந்தனர். அதன் பின்னர் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது.

இந்த 2 ஆம் பாகத்தில், நடிகை மஞ்சு வாரியர், அனுராக் கஷ்யப் மற்றும் கிஷோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

முதல் பாகத்தின் முடிவில் குமரேசனால் (சூரி) வாத்தியார் (விஜய் சேதுபதி) கைது செய்யப்படும் நிலையில், அதன் தொடர்ச்சியாக 2 ஆம் பாகம் உருவாகியுள்ளது.

2ம் பாகத்தில் விஜய் சேதுபதி வாத்தியாராக மாறுவதற்கு பின்னால் என்ன நடந்தது? சிறையில் இருந்து எவ்வாறு தப்பித்தார்? போன்ற பிளாஷ்பேக் காட்சிகளை பிரதானமாக கொண்டு உருவாகியுள்ளது.

மேலும் மஞ்சு வாரியர், விஜய் சேதுபதிக்கு இடையேயான முக்கிய காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

Latest news

உக்ரைன் – ரஷ்ய போர் – ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் உயிரிழப்பு

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு...

நாய் தாக்கினால் அஞ்சல் விநியோகம் இல்லை – Australia Post

கிறிஸ்துமஸ் பருவத்திற்கு முன்னதாக, செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை முறையாகப் பாதுகாக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் வலியுறுத்துகிறது. பணியில் இருக்கும்போது அஞ்சல் ஊழியர்கள் மீது நாய் தாக்குதல்கள் வியத்தகு...

Heard தீவில் வைரஸ் உறுதி – ஆஸ்திரேலியாவிற்கும் ஆபத்து

H5 பறவைக் காய்ச்சல் வைரஸ் Heard தீவை அடைந்ததை அதிகாரிகள் முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளனர். இறந்த யானை முத்திரைகளின் மாதிரிகளை பரிசோதித்த பிறகு, விஞ்ஞானிகள் தீவில்...

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு

2025 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் "அதிகாரப்பூர்வமற்ற தேசிய உணவாக" Hot Chips பெயரிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் டெலிவரி மற்றும் ஆர்டர் புள்ளிவிவரங்களை பதிவு செய்த புதிதாக வெளியிடப்பட்ட...

Uber Eats மற்றும் Menulog ஒப்பந்தத்தால் யார் பயனடைவார்கள்?

ஆஸ்திரேலிய சேவையான Menulog மற்றும் Uber Eats இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. நவம்பர் 26 ஆம் திகதி நள்ளிரவில் Menulog முடிந்த பிறகு, வாடிக்கையாளர்கள் Uber...

ஆஸ்திரேலிய சபையில் புர்கா அணிந்து வந்த தலைவரால் பரபரப்பு

ஆஸ்திரேலிய செனட் சபையில் பெண் தலைவர் புர்கா அணிந்து வந்தது சீற்றத்தைத் தூண்டியது. One Nation தலைவர் பவுலின் ஹான்சன், செனட் சபைக்கு கருப்பு புர்கா மற்றும்...