வனுவாட்டுக்கு மனிதாபிமான உதவியாக கூடுதலாக 5 மில்லியன் டொலர்களை வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அண்மையில் வனுவாட்டுவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக வனுவாட்டுக்கு தேவையான உதவிகளுக்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் சுமார் 2 பில்லியன் டொலர்களை ஏற்கனவே வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் நேற்று (22) வனுவாட்டுக்கு மேலும் 5 மில்லியன் டொலர் உதவிப் பொதியை வழங்க மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ சிகிச்சை, குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகளுக்காக சுமார் 2.5 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மதிப்பீட்டின்படி, வனுவாடுவை பாதித்த நிலநடுக்கத்தால் குறைந்தது 1,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
சுமார் 20,000 பேர் சுத்தமான குடிநீரைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இடம்பெயர்ந்த மக்களுக்கு தங்குமிடம், முதலுதவி மற்றும் பிற தேவையான பொருட்களை வழங்குவதற்கு ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கம் வனுவாடு செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து செயல்படுகிறது.