Breaking Newsவிக்டோரியாவின் சுற்றுலாத் துறையில் அழிவை ஏற்படுத்தியுள்ள காட்டுத்தீ

விக்டோரியாவின் சுற்றுலாத் துறையில் அழிவை ஏற்படுத்தியுள்ள காட்டுத்தீ

-

விக்டோரியா மாநிலத்தின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக, அம்மாநிலத்தின் சுற்றுலாத் துறையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, காட்டுத் தீ காரணமாக Halls Gap பிரதேசம் மூடப்படுவதால், நாளொன்றுக்கு சுமார் 1.9 மில்லியன் டொலர்கள் நஷ்டம் ஏற்படும் என Grampians-இல் உள்ள சுற்றுலாத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது நிலவும் காட்டுத் தீ நிலைமை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் Grampians தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், பிராந்திய சுற்றுலாத்துறையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்பிரதேசத்தின் சுற்றுலா ஈர்ப்பு உச்சத்தில் இருக்கும் காலப்பகுதியில் இந்த காட்டுத் தீ நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிராந்திய சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Grampians – Wimmera – Malle சுற்றுலா தலைமை நிர்வாகி மார்க் ஸ்லீமன் குறிப்பிடுகையில், இந்த காலகட்டத்தில் Halls Gap பகுதி பொதுவாக பிஸியாக இருக்கும்.

பிராந்திய சுற்றுலாப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கத்தின் தலையீடு அவசியம் என்பது அவர் கருத்தாகும்.

கிறிஸ்மஸ் தினத்தன்று கிராமிய பகுதியில் காட்டுத் தீ பரவல் காரணமாக அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

கிறீன்லாந்தை கையகப்படுத்த திட்டமிடும் ட்ரம்ப்

கிறீன்லாந்து தீவு விற்பனைக்கு அல்ல என அமெரிக்க ஜனாதிபதியிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்சென். டென்மார்க்கின் ஓர் அங்கமாக தன்னாட்சி பெற்ற பிராந்தியமாகத் திகழும்...

ஆஸ்திரேலிய வாழ் இலங்கையர்கள் பலருக்கு கிடைத்த ஆஸ்திரேலிய குடியுரிமை

அவுஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பலருக்கு பிரதமர் அந்தோனி அவர்களால் அவுஸ்திரேலிய குடியுரிமை அங்கிகரித்து வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா முழுவதும் அவுஸ்திரேலிய தினத்தைக் கொண்டாடவும்...

விக்டோரியா சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணம் எது தெரியுமா?

விக்டோரியாவில் நடத்தப்பட்ட ஆய்வில், விபத்தில் காயம் அல்லது உயிரிழக்கும் ஓட்டுனர்களில் பத்து பேரில் ஒருவர் ஐஸ் மருந்தைப் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. 2010 மற்றும் 2019 க்கு இடையில்...

கட்டுமானத் துறையில் சேரும் பயிற்சியாளர்களுக்கு $10,000 உதவித்தொகை

வரும் கூட்டாட்சித் தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கட்டுமானத் துறையில் சேரும் பயிற்சியாளர்களுக்கு 10,000 டாலர் உதவித்தொகை வழங்க ஆளும் தொழிலாளர் கட்சி முடிவு செய்துள்ளது. இந்த...

விக்டோரியா சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணம் எது தெரியுமா?

விக்டோரியாவில் நடத்தப்பட்ட ஆய்வில், விபத்தில் காயம் அல்லது உயிரிழக்கும் ஓட்டுனர்களில் பத்து பேரில் ஒருவர் ஐஸ் மருந்தைப் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. 2010 மற்றும் 2019 க்கு இடையில்...

மேற்கு ஆஸ்திரேலியாவில் மின்சாரம் இல்லாமல் உள்ள 40,000 வீடுகள் மற்றும் வணிகங்கள்

காட்டுத்தீயின் விளைவாக, மேற்கு ஆஸ்திரேலியாவில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிகங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் பெர்த் நகரம் முழுவதும் கடும் இருள் சூழ்ந்துள்ளதாக...