Newsஆட்குறைப்பு செய்த Google நிறுவனம் - தொழிலை இழந்த ஊழியர்கள்

ஆட்குறைப்பு செய்த Google நிறுவனம் – தொழிலை இழந்த ஊழியர்கள்

-

Google நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தில் 10 சதவீதம் ஊழியர்கள் தொழிலை இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய நாட்களில் Google இல்லாமல் உலக இயக்கமே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. எந்தத் தேவைக்கென்றாலும் உடனடியாக செல்போன் மூலம் Google செய்து பார்ப்பது வழக்கமாகிவிட்டது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பணியாளர்களை கொண்டு கூகுள் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட சுந்தர் பிச்சை செயல்பட்டு வருகின்றார்.

இந்நிலையில் Google நிறுவனத்தில் 10 சதவீத ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யப் போவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவில் உள்ள ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர்.

மேலாளர், இயக்குநர், துணைத்தலைவர் போன்ற பதவிகளில் உள்ளவர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவன செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

”நிறுவனத்தின் செயல்திறனை இரட்டிப்பாக மாற்றுவதற்காக இந்த ஆட்குறைப்பு செய்யப்படுகிறது. நிர்வாகப் பிரிவில் உள்ள சிலர் ஆட்குறைப்பு செய்யப்பட்டு அனுப்பப்படவுள்ளனர். சிலரது பணிநிலை வேறு பிரிவுகளுக்கு மாற்றப்படுகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Google நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஆல்பபெட் நிறுவனம் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரியில் 12 ஆயிரம் ஊழியர்களை நீக்கியது. அதைத் தொடர்ந்து தற்போது நிர்வாகப் பிரிவில் உள்ள 10 சதவீதம் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டில் மட்டும் 4 முறை ஆட்குறைப்பு பணியை கூகுள் நிறுவனம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...