சிட்னியில் உள்ள Olympic Park அருகே காட்டுத் தீ ஏற்பட்டது. Holker தெரு அருகே காட்டுத் தீ பரவியுள்ளதாக கூறப்படுகிறது.
6 தீயணைப்பு வாகனங்களும், 22 தீயணைப்பு வீரர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மலைப்பாதை இருபுறமும் மூடப்பட்டுள்ளது. இதே பணிகளுக்காக நியூ சவுத் வேல்ஸ் மாநில காவல்துறையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“Hazards Near Me” பயன்பாடு (App) மூலம் வழங்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்கு கவனம் செலுத்துமாறு உள்ளூர்வாசிகளுக்கு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.