ஆஸ்திரேலிய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் பிரிவுக்கு புதிய அதிகாரிகளை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அடிப்படை பணி அனுபவம் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seek இணையதளம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பந்தப்பட்ட பதவிக்கு 100,000 முதல் 120,000 டாலர்கள் வரை முழுநேர சம்பளம் ஆகும்.
இதன்படி, இந்த பதவி தொடர்பான சேவை மெல்பேர்னை மையமாகக் கொண்டு செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்மூழ்கிக் கப்பல்களை ஓட்டுதல், அணு உலைகளை இயக்குதல், நீர்மூழ்கிக் கப்பல்களை மூலோபாயமாக நிலைநிறுத்துதல் உட்பட ஒதுக்கப்பட்ட எந்தவொரு கடமைகளையும் அந்த பதவியில் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் அதிகாரி பதவிக்கு அடிப்படை இராணுவப் பயிற்சி மற்றும் பணியிடப் பயிற்சி ஆகியவை கட்டாயமாகும், மேலும் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு $113,000 ஆரம்ப சம்பளம் மற்றும் 16.4% மேலதிக ஊதியம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மானிய விலையில் வீடுகள் உள்ள இந்தப் பதவிக்கு உடல் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.