விக்டோரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள கிராமியன் தேசிய பூங்கா காட்டுத்தீ இன்னும் கட்டுக்குள் இல்லாததால் அங்குள்ள மக்களுக்கு VicEmergency எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, Bornes Hill and North Boundary Rd-இல் வசிப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர், மேலும் மக்கள் விரைவாக பதிலளித்து அந்த பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
2019 ஆம் ஆண்டின் Black Summer காலத்திற்குப் பிறகு விக்டோரியாவில் ஏற்பட்ட மோசமான தீ நிலை இதுவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா மாநிலத்தின் பல பகுதிகளிலும், அவுஸ்திரேலியாவின் உட்பகுதிகளிலும் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் காற்றினால் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் மின் தடைகள் கூட ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விக்டோரியாவின் ஒரு பகுதியைத் தவிர மற்ற அனைத்தும் கடுமையான வன அபாயத்தை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.