அமெரிக்காவின் தேசியப் பறவையாக வெண்தலைக் கழுகை அதிகாரபூா்வமாக அறிவிக்கும் மசோதாவில் ஜனாதிபதி ஜோ பைடன் கையொப்பமிட்டு உறுதி செய்தாா்.
வெண்தலைக் கழுகுகள் அறிவியல் ரீதியாக “ஹாலியேட்டஸ் லுகோசெபாலஸ்” என அழைக்கப்படுகின்றன. இந்த வெண்தலைக் கழுகு அலாஸ்கா, கனடா, வடக்கு மெக்சிகோவில் அதிகம் வசிக்கின்றன.
வடஅமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது. அமெரிக்க ஆவண காப்பகத்தின்படி 1782ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட காங்கிரசிடம் வெண்தலைக் கழுகு பறவையை அமெரிக்காவின் தேசிய பறவையாக பயன்படுத்த மசோதா தரப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
240 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் சக்தி மற்றும் வலிமையின் சின்னமாக உள்ள வெண்தலைக் கழுகை அமெரிக்காவின் தேசிய பறவையாக ஜனாதிபதி ஜோ பைடன் அங்கீகரித்துள்ளார்.