67 பேருடன் பயணித்த அஜர்பைஜான் நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானம் கஜகஸ்தானில் விபத்துக்குள்ளானதாக பிபிசி செய்தி சேவை தெரிவித்துள்ளது.
கஜகஸ்தானின் அக்டா நகருக்கு அருகில் இந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இந்த விபத்தில் 25 பேர் உயிர் தப்பியுள்ளதாகவும், அவர்களில் 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கஜகஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
விமானம் விபத்துக்குள்ளானபோது தீ விபத்து ஏற்பட்டது, ஆனால் பின்னர் அது அணைக்கப்பட்டது.
எவ்வாறாயினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
எம்ப்ரேயர் 190 ரக விமானமான இங்கு 62 பயணிகளும் 5 பணியாளர்களும் உள்ளனர்.
இது அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து ரஷ்யா நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் 40 பேர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.